மும்பை,ஜன.25:ஸ்ரீநகரில் லால்சவுக்கில் தேசிய கொடியை ஏற்றுவதற்காக ரெயிலில் புறப்பட்ட கர்நாடகா மாநில பா.ஜ.க தொண்டர்கள் தூக்கத்திலிருந்து விழித்த பொழுது தாங்கள் பயணித்த ரெயில் வந்த வழியிலேயே வேகமாக திரும்பிச் செல்வதை கண்டனர்.நீண்டகால மக்கள் போராட்டத்தினால் அமைதியை இழந்த கஷ்மீர் சில நாட்களாக அமைதியாக உள்ளது. அமைதியை குலைப்பதையே வழக்கமாகக் கொண்ட பாசிச சங்க்பரிவாரின் அரசியல் முகமூடியான பா.ஜ.கவின் லால்சவுக்கில் தேசியகொடியை ஏற்றும் நாடகம் மீண்டும் கஷ்மீரில் அமைதியை குலைத்துவிடும் என கருதி மத்திய-மாநில அரசுகளின் உத்தரவின்பேரில் பாதுகாப்பு ஏஜன்சிகள் தலையிட்டு 1800க்கும் அதிகமானோரை ஏற்றிச் சென்ற ரெயிலை திருப்பி அனுப்பினர்.
சிறப்பு ரெயில் மூலம்தான் பா.ஜ.க மற்றும் அக்கட்சியின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சா தொண்டர்கள் ஸ்ரீநகருக்கு புறப்பட்டிருந்தனர். ஜம்முகஷ்மீருக்கு வெளியேயிருந்து போராட்டக்காரகள் எவரும் உள்ளே நுழையாமலிருக்க மாநில அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதிகமானோர் கஷ்மீருக்கு வந்தால் பிரச்சனை இன்னும் மோசமாகும் எனக் கருதி மத்திய பாதுகாப்பு ஏஜன்சிகளும், ரெயில்வே பாதுகாப்பு படையும் மாநில போலீசாரும் இணைந்து பெங்களூரிலிருந்து புறப்பட்ட ரெயிலை திருப்பி அனுப்பினர்.
பெங்களூரிலிருந்து புறப்பட்ட ரெயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மஹராஷ்ட்ரா மாநிலத்தை வந்தடைந்தது. அஹ்மத் நகருக்கு அடுத்துள்ள தவ்த் ரெயில்வே ஸ்டேசனுக்கு ரெயில் வந்தபொழுதே முன்னரே தயாராக்கிய திட்டத்தின் படி 2 பெட்டிகள் ரெயிலுடன் இணைக்கப்பட்டது. அவற்றில் 200 போலீசார் ஏறினர். தொடர்ந்து ரெயில் அடுத்துள்ள ஸரோல-கஸர் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டது. அங்கு ரெயில் எஞ்சின் பிரித்தெடுக்கப்பட்டு ரெயிலுக்கு எதிர் பக்கம் பொருத்தப்பட்டது. ரெயில் கர்நாடகா மாநிலம் குல்பர்காவை நோக்கி வந்துக்கொண்டிருக்கும் பொழுதுதான் தூங்கிக் கொண்டிருந்த நபர்களுக்கு ரெயில் பெங்களூரை நோக்கி திரும்பிச்செல்வது புரிந்தது.கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன்!! வானம் ஏறி வைகுண்டம் போனானாம்!! பாவம் பாரதிய ஜனதா காரர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தன் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியில் தேசிய கொடியேற்ற யாரிடம் அனுமதி பெற வேண்டும்..
Post a Comment