JULY 16, புதுடெல்லி: மும்பையில் கடந்த புதன்கிழமை மூன்று இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளை சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
கண்டிக்கத்தக்க கோழைத்தனமான இச்செயல் நடுங்கச்செய்ததாகவும், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபத்தை தெரிவிப்பதாகவும் எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், காயமடைந்தவர்கள் ஆகியோரின் துயரத்தில் பங்கேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குண்டு வெடிப்பு சம்பவத்தை மனிதத்தன்மை விரோதமானது என குறிப்பிட்ட இ.அபூபக்கர், இதன் பின்னணியில் செயல்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.
அனைத்து சமூக மக்களும் வாழும் ஒரு நகரத்தில் பிரிவினையை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு நடத்தப்பட்ட கூட்டுப் படுகொலையாகும் இது. சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் ஏதேனும் ஒரு பிரிவினரை நோக்கி விரலை சுட்டிக்காட்டுவதிலிருந்து புலனாய்வு ஏஜன்சிகளும், அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் விலகவேண்டும்.
ஊகங்களின் அடிப்படையிலான குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே பல நிரபராதிகளின் வாழ்க்கையை சீரழித்துள்ளது. கடந்த காலங்களில் நடந்த ஏராளமான குண்டு வெடிப்புகளில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்த நிரபராதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உண்மையான குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகும், நிரபராதிகள் இதுவரை விடுவிக்கப் படவில்லை. ஏதேனும் ஒரு மதத்தையோ, பிரிவினரையோ, சமுதாயத்தையோ முற்றிலும் குற்றம் சாட்டுவதை நிறுத்திவிடுவது நல்லது.
அதற்கு பதிலாக தீவிரவாதத்தை தனிமைப்படுத்துவதிலும், எதிர்கொள் வதிலும் மத்திய-மாநில அரசுகள் சந்தர்ப்பசூழலுக்கு தகுந்தவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நிரபராதிகள் கொடுமைக்கு ஆட்படுத்தாதவிதம் ஒவ்வொரு வழக்குகளையும் ஆதாரங்களின் அடிப்படையில் கையாளவேண்டும் என இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
தீவிரதவாதம் ஒழிய சரியான
முயற்சி எடுக்க வேண்டும் இந்த அரசு.
வைகோ என்ற இந்திய தேச துரோகி செய்வது அப்பட்டமான துரோகம். இந்தியாவிலேயே பயங்கரவாதி மோடி என்பவனால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டது குறித்து விடுதலைப்புலிகளிடம் பிச்சை எடுத்து இந்தியாவுக்கு தேச துரோகம் செய்யும் இந்த துரோகிகள் கேட்காதது ஏன்? குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் மனித இனத்தில் சேராதவர்களா? ராஜபக்சேயை தூக்கிலிட சொல்லும் இந்த விடுதலைப்புலிகளின் ஏவல் நாய்கள் மோடி என்ற மிருகம் வரும்போது வாயையும் சூ.......தையும் பொத்திக்கொண்டிருப்பது ஏன்?
இந்த துரோகிகளுக்கு - இலங்கையில் விடுதலைப்புலிகள் முஸ்லிம்களிடம் கொள்ளையடித்த பணம் பிச்சை போடப்படுகிறது.
அதனால்தான் இந்த தேச துரோகிகளுக்கு இலங்கை மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது.
இந்த கபட நாடக மிருகங்களை புறக்கணியுங்கள்...
மிகப்பெரிய தாக்குதலுக்கு முன்பான சிறிய தாக்குதல் என்று பயங்கரவாதி நரேந்திர மோடி என்பவன் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது..இதுவரை நடைபெற்ற பல குண்டு வெடிப்பு சம்பவளுக்கு காரணம் ஆர் எஸ் எஸ் மிருகங்கள் என்று தெரிய வந்திருக்கிறது..மோடியின் எச்ச்சரிக்கை வேறு..ஆக விசாரிக்கப்பட வேண்டியவன் மோடி மற்றும் ஆர் எஸ் எஸ் ஜாதி மிருகங்கள்.
வணக்கம் மகேந்திரன் வாழ்த்துக்கள். கருத்து சொன்னதற்கு நன்றி. மீண்டும் வாருங்கள் உங்கள் கருத்துக்கள் உற்சாகம் அளிக்கின்றது.
வணக்கம் மர்மயோகி, உங்கள் கருத்துக்கு நன்றி! நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் தொடர்ந்து வைகோவை பற்றி தவறான கருத்தை பரப்பி வருகிறீர்கள். நீங்கள் சொல்வது போல் வைகோ புலி ஆதரவாளர்தான் அதனால் என்ன தவறு. புலிகள் அமைப்பு தமிழர் விடுதலைக்கு போராடிய ஒரு இயக்கம். அவர்கள் சில பல தவறுகள் செய்துள்ளார்கள் என்பது உண்மையே அதற்காக வேண்டி அவர்கள் செய்த மொத்த போராட்டத்தையும் உயிர் தியாகங்களையும் கொச்சைபடுத்துவது முறையல்ல. ஈழத்தமிழர்கள் பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கு நீங்களும் குரல் கொடுக்க வேண்டுமே தவிர நீங்கள் உங்களுக்கு ஏற்பட்ட பதிப்புகளுக்கு பழி வாங்குகிறேன் பேர்வழி என்று சொல்லி ஒரு மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மறுத்து மவுனம் காட்பதும் அதை எதிர்த்து அவர்கள் அப்படி செய்தார்கள், இப்படி செய்தார்கள் என்று பேசுவதும், வைகோ முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசவில்லை என்று சொல்லி மறுதலிப்பதும் அறிவுடைமை அல்ல. பாதிக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பதே நல்ல பத்திரிகை தருமம். உங்கள் மர்ம யோகி என்பது இணையதளமா உங்கள் பெயரில் சொடுக்கினால் உங்கள் இணையதளத்தை பார்க்க முடியவில்லை அதனால் நீங்கள் என்ன சொல்கிறீங்கள் என்பதை முழுமையாக புரிந்து கொள்ளவும் முடியவில்லை. ஒருவர் மீது கொண்டுள்ள வெறுப்பு உங்களுக்கு அவர்கள் மீது நீதி செலுத்த தடையாக இருக்க வேண்டாம். மேலும் சிந்திக்கவும் இணையத்தளம் தொடர்ந்து மோடி குறித்தும், ஹிந்துத்துவா பயங்கரவாதம் குறித்தும் எழுதி நடுநிலை பேணி வந்துள்ளது என்பதையும் உங்களக்கு அன்போடு தெரிவித்து கொள்கிறேன். தீமைகளுக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்களை அன்போடு அழைக்கிறோம். நட்புடன் ஆசிரியர் புதியதென்றல். வணக்கம் .
மோடிக்கு எதிராக வைக்கோ குரல் கொடுக்கவில்லை என்ற காரணத்தினால் வைக்கோ ஈழத்தமிலர்களுக்கு குரல் கொடுப்பதை தவறு காண முடியாது. எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு. மோடியை எதிர்க்க வில்லை என்ற ஒரு காரணத்திற்க்காக வேண்டி நீங்கள் ராஜபக்சேயை ஆதரிக்க தலைபடுவதோ, அதன் காரணமாக ராஜபக்சேக்கு எதிராக செயல்படுவது தவறு என்று சொல்வதோ நடுநிலை இல்லை என்பதை அமைதியாக யோசித்து பாருங்கள் புரியும்.
Post a Comment