JULY 17, சிவகாசியில் மதிப்பெண் குறைவாக எடுத்ததை பெற்றோர் திட்டியதால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி தளவாய்புரம் தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை சாமி. இவரது மகள் கவிதா (17).
இவர் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாதத்தேர்வின் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் அவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண் எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி பலியானார். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment