Jul 13, 2011

கர்நாடகா மாநிலத்தை காவி மாநிலமாக மாற்ற சதி!

JULY பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தை ஆளும் பாசிச ஹிந்துத்துவா  பா.ஜ.க அரசு பள்ளிக் கூடங்களில் பகவத் கீதையை போதிக்க ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டிலுள்ள மடத்திற்கு 40 கோடி ரூபாய் அளித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள சிர்ஸியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மடத்திற்கு பா.ஜ.க அரசு இவ்வளவு பெரிய தொகையை அனுமதித்துள்ளது.

மாநிலத்தில் ஏராளமான பள்ளிக்கூடங்கள் அடிப்படை வசதியில்லாமல் மூடவேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் வேளையில் ஹிந்துத்துவா கொள்கையை பரப்பும் நோக்கில் பகவத் கீதையை போதிப்பதற்காக 40 கோடி மானியமாக அளித்துள்ளது. கர்நாடகாவில் கீதையை கற்பது கட்டாயமாக்க வில்லை என அறிக்கை வெளியிட்ட அம்மாநில கல்வி அமைச்சரின் கூற்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி என்பது தெளிவாகியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பகவத் கீதையை கற்று கொடுப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவை பிறப்பித்தது கர்நாடகா பா.ஜ.க அரசு. கடந்த 2009 செப்டம்பர் 30-ஆம் தேதி பொது கல்வி துறை வெளியிட்ட 74/2009 உத்தரவின்படி பகவத் கீதையை போதிக்க வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், அதில் குறைவு ஏற்படுத்தக்கூடாது என உத்தரவிட்டிருந்தது.

எதிர்ப்பை அஞ்சி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படவில்லை. இந்த கல்வியாண்டில் தான் பகவத் கீதையை போதிக்க மாவட்ட கல்வி இயக்குநர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிக்கூட வகுப்புகள் முடிந்த பிறகு பகவத் கீதை வகுப்பை நடத்தலாம் எனவும், மாணவர்களை கட்டாயப்படுத்தி வகுப்புகள் நடத்தவியலாது எனவும் கல்வித்துறை கடிதம் எழுதியிருந்தது.

இதனை மீறி வலுக்கட்டாயமாக பகவத் கீதை வகுப்புகளை நடத்தும் முயற்சியை பாசிச பா.ஜ.க அரசு மேற்கொண்டுள்ளது. பகவத் கீதையை கற்பதை கட்டாயப்படுத்தி பாடத்திட்டத்தில் இடம்பெற செய்ய முயலும் பா.ஜ.க அரசுக்கெதிரான போராட்டம் கர்நாடாகவில் தீவிரமடைந்துள்ளது.

குஜராத் மாடலில் காவிமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்து வதற்கு எதிராக சமூக ஆர்வலர்களும், இடதுசாரிகளும், எழுத்தாளர்களும் களமிறங்கியுள்ளனர். கடும் எதிர்ப்பை தொடர்ந்து கோலார், சிக்பெல்லாபூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் பகவத் கீதையை போதிக்க இயலாது என அதிகாரிகள் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

4 comments:

Anonymous said...

ஜம்மு காஷ்மீரில் பச்சை பயங்கரவாதம், கர்நாடகாவில் காவி பயங்கரவாதம்...
ஒண்ணுக்கொண்ணு சரி தானே.

Anonymous said...

நீதியாகப்பார்த்தால் காஷ்மீர் யாருக்குச்சொந்தம்? நமக்கா, பாகிஸ்தானுக்கா, அல்லது கஷ்மீரிகளுக்கா? இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைய்யோடு, சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருந்த காஷ்மீர் மக்களை பாகிஸ்தானும், இந்தியாவும் இரண்டு குரங்குகளாக மாறி
பங்கு வைத்துக்கொண்டன. தங்களுக்கு சுதந்திரம் வேண்டும், தாங்கள் யாருடனும் சேரமாட்டோம் என்று போராடிய மக்களுக்கு, சுதந்திரமாக தேர்தல் வைத்து காஷ்மீர் மக்களின் விருப்பப்படி செத்துகொள்ளலாம் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேருஜி ஐ.நா. சபையில் அளிக்கப்பட இந்தியாவின் வாக்கு இன்னும் நிறைவேற்றப்படவில்லை. காஷ்மீர் தங்கள் சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள்

- NEETHI VENDUM

PUTHIYATHENRAL said...

காஷ்மீர் பிரச்சனைக்கும் இதற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறது. காஸ்மீர் என்பது இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ சொந்தமானது இல்லை. அது தனிநாடு இதுதான் அதன் வரலாறு. அதனால் காஷ்மீரில் நடப்பதை தீவிரவாதம் என்று சொல்ல முடியாது. அது அந்த மக்களின் சுதந்திர போராட்டம். எப்படி காந்திஜியும், நேதாஜியும் இந்திய சுதந்திரத்திற்கு போராடும் போது வெள்ளைக்காரன் அவர்களை இப்படித்தான் தீவிரவாதிகள் என்று சொன்னான். அதுபோல்தான் இப்பவும் காஸ்மீர் போராட்டத்தை தீவிரவாதம் என்று இந்தியா முத்திரை குத்துகிறது. மற்றபடி அது காஷ்மீர் மக்களின் சுதந்திர போராட்டமே.

Anonymous said...

நான் சொன்னவற்றை தவறாக புரிந்து கொண்டீர்கள் நண்பரே. காஷ்மீரில் பண்டிட்கள் மற்றும் டோக்ரா இனத்தவரின் வாழ்க்கையை நிர்முலமாக்கிய முஸ்லீம் பயங்கரவாதத்தை பற்றி தான் சொன்னேன்.