JULY 28, சென்னை: திமுக கூட்டணியில் இருந்து வெளியேற இன்று நடைபெற்ற பாமக பொதுக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. பாமக பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் அதன் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய பலரும் திமுக கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டும் என்று கட்சித் தலைமையை வலியுறுத்தினர். பாமக மாநில பொதுச்செயலர் வடிவேல் ராவணன் பேசுகையில், ஈழத் தமிழர்களுக்கு திராவிட கட்சிகள் எதுவும் செய்யவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியும் துரோகம் செய்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விஞ்ஞான பூர்வமாக 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. தமிழர்களின் நலனுக்காக வாழ்த்து கொண்டிருக்கும் கட்சி பா.ம.க. எந்த திராவிட கட்சியையும் சாராமல் தனிமையில் செயல்பட்டு மக்களை நாம் காப்பாற்ற வேண்டும். அந்த வழியில் நாம் முன் செல்ல வேண்டும் எனக் குறிப்பிட்டார். இறுதியில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறவும், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
2 comments:
நில மோசடி வழக்கில் ஒரே ஒருத்தர் மாட்டினதுக்கே இப்படி பல்டி அடிச்சா.... என்னத்த சொல்றது...
இந்த மொட்டைக்கு வேரவேலயே இல்லை அரசியல் பச்சோந்தி. காசு எங்கே கிடைக்குமோ ! அங்கே ஒட்டிக்கொள்வான் இப்போ இவன் ஆசை ஜெயலலிதா கூட ஓட்டனும் ஒட்டுன்னியஹா பிறக்க வேண்டியவன் வன்னியனஹா பெரந்துட்டான். சமரசம் !!
Post a Comment