JULY 29, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வேதாரண்யத்தை அடுத்து புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 27.07.2011 அன்று இரண்டு படகுகளில் சென்று நடுக்கடலில் தங்கி இருந்து இரவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் ஒன்றும், சிங்கள மீனவர்கள் இருந்த இரண்டு படகுகளும் வந்துள்ளன.
தமிழக மீனவர்கள் உள்ள படகுகளில் ஏறி மிரட்டிய அவர்கள், படகுகளில் இருந்த மீன்கள், நண்டு, இறால் போன்றவற்றை பறித்து சென்றனர். செல்போன், வாட்ச், பணம் போன்றவற்றையும் தமிழக மீனவர்களிடம் இருந்து அவர்கள் பறித்துள்ளனர். மேலும் மீனவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியடித்துள்ளனர். இதனை பாதிக்கப்பட்ட சுப்பிரமணி என்ற மீனவர் தெரிவித்துள்ளார். கடந்த வியாழன் கிழமை அன்று காலையில் இருவேறு சம்பவங்களில் ராமேஸ்வரம் மற்றும் வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிலிருந்து 48 மணி நேரத்தில் தற்போது மீண்டும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கியுள்ளனர்.
சிந்திக்கவும்: இந்தியா வல்ரசாம் தனது நாட்டு மீனவர்களை பாதுகாக்க துப்பில்லை இவர்கள் உலக அளவில் வேறு பெரிய நாட்டாமை மாதிரி ஆப்கானிஸ்தான் பிரச்சனையில் மூக்கை நுழைப்பது, காஷ்மீர் விசயத்தில் சமாதானம் பேச உலக நாடுகள் வரக்கூடாது என்று சொல்வது, ஈழத்தமிழர் விசயத்தில் தவறான முடிவு எடுத்து அவர்களை கொத்து கொத்தாக கொன்று குவிக்க காரணமாக அமைந்தது. இவர்களுக்கு என்ன யோக்கிதை இருக்கிறது தனது நாட்டின் குடிமக்களை பாதுகாக்க முடியாத இவர்கள் உலக பிரச்சனைகளில் வேறு தலையை நுழைகிறார்கள்.
கூரை ஏறி கோழி பிடிக்கத்தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம். அமெரிக்காவின் ஒரு குடிமகனை தொட்டால் போதும் மொத்த ராணுவமும் வரும். இவர்கள் ஒரு கேவலபட்ட, கேடுகெட்ட ஜென்மங்கள். சொந்த நாட்டின் குடிமக்களை எப்படி காட்டு வேட்டை என்கிற பெயரில் ராணுவத்தை கொண்டு கொன்று ஒழிப்பது என்பதும், காஷ்மீர் பெண்களை கற்பழிப்பதும், சிறுவர்களை சுட்டு கொல்வதும், ஈழத்து பெண்களை கதற கதற கற்பழித்ததும் இதுதான் இந்த கேடுகெட்ட ராணுவத்துக்கு கைவந்த கலை வேறு ஒன்றும் தெரியாது. பொதி சுமக்கும் கழுதைகள் மாதிரி.
1 comment:
இலங்கையின் கடல் பிரதேசத்துக்குள் இந்திய மீனவர்கள் அத்து மீறி நுழைந்து கொள்ளை மற்றும் பல அட்டுளியங்கள் செய்கிறார்கள். இதில் பெரும் பாலும் பாதிக்கபடுவது இலங்கை தமிழ் மீனவர்கள். தமிழ் இனத்தவனோ, சிங்கள இனத்தவனோ, முஸ்லிம் மதத்தை சேர்ந்தவனோ அவன் இலங்கை மீனவன்.
30 வருடகாலம் சொல்லொணாத் துயர்களை அனுபவித்துவிட்டு பிச்சைக்காகச் செல்லும் எமது மீனவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என வட மாகாண கடற்றொழிலாளர் தலைவர் எஸ். தவரட்ணம் தெரிவிப்பது:-
எல்லை தாண்டி அத்துமீறி இழுவைப்படகுகள் மூலம் தமிழக மீனவர்கள் வருவதைத் தடுக்க எவரும் முன்வருவதாக தெரியவில்லை. முதலில் அவர்கள் வருவதை தடுத்தாலே பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம். இழுவைப் படகுகள்மூலம் தமிழக கடல்பரப்பின் வளங்களை மண்ணாக்கிய பின்னர் பிழைப்பின்றி கடல்வளமும் மீன்வளமும் நிறைந்துள்ள எமது கடல் வளத்தை மண்ணாக்க புறப்பட்டுவிட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக மீனவர்களை விடுவிப்பதற்காக தமிழகத்தில் எந்தளவுக்கு அழுத்தம் தொடுக்கப்பட்டதோ அதே அழுத்தம் கொடுக்கப்பட்டு அங்கு நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது மீனவர்களையும் உடன் விடுதலை செய்ய வேண்டும் என எஸ்.தவரட்ணம் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment