Jun 12, 2011

ஓவியர் ஹுசைனை நாடு கடத்தியது சரியா?

உலகின் மிகச்சிறந்த சம கால ஓவியர்களில் ஒருவரான M . F . ஹுசைன் லண்டன் ஆஸ்பத்திரியில் கிட்டத்தட்ட ஒரு மாதம் தொடர்ந்து சிகிட்சைப்பெற்றும் பலனின்று இறந்துவிட்டார்.

அவரின் இறப்புடன் அவர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் அவருடன் சேர்ந்தே இறந்துவிடுமா? RSS ன் ஓவியர் ஹுசைன் மீதான எதிர்ப்பை சந்திக்க இயலாமல் அவரை நாடு கடத்த இசைந்தது இந்திய அரசு.

ஒரு ஓவியனுடைய பார்வைபோல் பொதுமக்களுக்கும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஓவியம் மக்களின் சிந்தனைகளை நன்மையான காரியங்களில் ஈடுபடவைப்பதாக இருக்கவேண்டும். அவருடைய ஓவியங்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் அளவுக்கு நமக்கு அறிவும் இல்லை, நேரமும் இல்லை.

மாதுரி தீட்சித் எனும் பம்பாய் நடிகையின் அழகை விதம், விதம்மாக வரைவதிலும், ரசிப்பதிலுமே கணிசமான காலங்களை கழித்த கிழட்டு வக்கிரப் புத்தி படைத்தவர்.

ஹிந்து கடவுள் சரஸ்வதியின் உருவத்தை ஆபாசமாக வரைந்து பெருவாரி மக்களின் கோபத்தை வாங்கிக் கொண்டார். அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு RSS வகையறாக்கள் அவரை நாடுகடத்தி, தான் பிறந்த மண்ணிலே தனது கடைசி காலங்களை கழிக்க இயலாமல் செய்துவிட்டன.

தெய்வங்களை உருவங்களாக்குவதில் நிறைய தர்ம சங்கடங்கள் உள்ளன. அவற்றில் ஓவியர் ஹுசைன் செய்த முட்டாள் தனமும் ஓன்று. ஏன் ஓவியர்களின் பார்வை துகிளுரிவதாகவே இருக்கிறது? என்பது பில்லியன் டாலர் கேள்வி.

இது இப்படி இருக்க, சரஸ்வதியின் உருவத்தை ஓவியர் ஹுசைன் ஆபாச படமாக வரைந்ததை பிரச்சனை ஆக்கி அவர் இந்தியாவை விட்டு குடிபெயர்ந்து லண்டன் செல்ல காரணமான RSS வகையறாக்கள் முற்றிலும் இது போன்ற செயல்களை செய்ய, பேச தகுதி அற்றவர்கள்.

காரணம், தஸ்லீமா நஸ்ரின் என்ற பங்களா தேசப் பெண் கர்ப்ப அறை சுதந்திரம் (எந்த ஆணுடைய குழந்தையையும் கற்பத்தில் சுமந்துகொள்ளும் சுதந்திரம்) கேட்டு தன் விருப்பத்தை எழுத்துக்களாக வெளியிட்டார்.

அந்த படுபாதகமான சிந்தனையை, அசிங்கத்தை எதிர்த்த பங்களா தேச மக்கள் அவரை நாடு கடத்தினர். அவருக்கு அடைக்கலம் கொடுக்க முற்றிலும் துணையாக நின்றது இந்த RSS ம் அதைச் சார்ந்த நியாயவான்கலும்தான்.

ஒரு தேசத்தின் ஒட்டு மொத்த மக்களுடைய சிந்தனைக்கு எதிராக ஒரு அசிங்கத்தை அரங்கேற்ற துணிந்த பெண்ணுக்கு அடைக்கலம் கொடுக்க நினைத்தது ஹிந்துத்துவாவின் முற்போக்கு சிந்தனையா? அப்படி செய்தது ஹிந்துதுவாவிற்கும் அந்த கேடுகெட்ட கலாசாரத்தை ஊக்கப்படுத்தும் ஹிந்துத்துவாகாரர்களுக்கும் ஓவியர் ஹுசைன் அசிங்கத்தை விமர்சிக்கவோ, அதை எதிர்த்து போராடவோ எந்த நியாயமும் இல்லை.

சல்மான் ருஷ்டி என்ற எழுத்துக் கிறுக்கன் இஸ்லாத்திற்கு எதிராக புத்தகம் வெளியிட்டார் அதற்கு முக்கியம் கொடுத்தது இந்த ஹிந்துத்துவா ஜந்துக்கள். மற்ற மதத்தினர்களின் உணர்வுகளை புண்படுத்தி, மாற்று மதத்தினரின் கடவுள்களை இழிவுபடுத்தி, அவர்களது மத வழிபாட்டுத்தலங்களை இடித்து, அவர்கள் வேதங்களை கொளுத்தி இப்படி தீவிரவாதம் புரிந்தவர்கள்தான் இந்த ஆர்.எஸ்.எஸ். ஹிந்த்துதுவா இயக்கங்கள்.

நிர்வாணம் என்பது ஹிந்துத்துவாவிற்கும், ஹிந்துத்துவாவினருக்கும் தெய்வீகம். இதை (அம்மணத்தை) அம்மனச்சாமியார்களை வணக்கத்திற்குரியதாக்கி வணங்கிக்கொண்டிருக்கும்
இந்த ஹிந்துத்துவா சித்தாந்தவாதிகள் தான் ஓவியர் ஹுசைன் 'தான் வரைந்ததை" வாபஸ் வாங்கிய பிறகும் அவரை இந்தியாவுக்கு திரும்பவிடாமல் செய்தனர்.

ஹிந்துத்துவா விற்கு தஸ்லீமா நச்ரீனும், சல்மான் ருஷ்டியும் ஒன்றாக தெரிவதும், ஓவியர் ஹுசைனை வேறு கண் கொண்டு பார்ப்பதும் ஏன்?

நியாயங்களை சொல்ல நியாயவான்கள் வரட்டும். அநியாயங்களின் பிரும்மாண்டமான ஹிந்துத்துவாவிற்கும், ஹிந்துத்துவாவினருக்கும் நியாய சபைகளுக்கு வர எங்கனம் துணிவு வந்தது? அநியாயங்களின் மொத்த உருவே, அரக்கத்தனத்தின் மறு பிறப்பே, பச்சோந்தித்தனத்தின் கள்ளக்குழந்தையே உன் பெயர்தான் ஹிந்துத்துவாவா?

2 comments:

ADMIN said...

ஹிந்துத்துவா..ஹிந்துத்துவா.. என்று உங்கள் கட்டுரையிலும் நிறைய ஹிந்துத்துவா.. இடம்பெற்றிருக்கிறதே..! என்ன சொல்கிறீர்கள்..?

தலைத்தனையன் said...

அன்பர் தங்கம் பழனி அவர்களுக்கு, ஹிந்துத்துவா என்பதற்கும் ஹிந்து தர்மம் என்பதற்கும் பாரிய வேற்றுமை உண்டு. ஹிந்துத்துவா என்பதை
நாம் சம காலங்களில் RSS பிஜேபி, விஷ்வ ஹிந்து பரிஷத், சிவ சேனா, பஜ்ரங் தல், மற்றும் சில அதீத தீவிர வாத கட்சிகளால் கொன்று குவிக்கப்பட்ட பல்லாயிரம் மக்கள், நாசமாக்கப்பட்ட பல நூறு கோடி பொருளாதாரம், பிஞ்சுக்குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை. இந்த பயன்கரவாதத்திற்குதான் ஹிந்துத்துவா என்று பெயர். குஜராத், பீகார், பீவண்டி இன்னும் பன்னூறு ஊர்கள் இவர்களின் நாசகார செயல்களுக்கு எடுத்துக்காட்டு.