Jun 11, 2011

சுஷ்மா சுவராஜ் ஆடிய தேசபக்தி குத்தாட்டம்!!

ஜூன் 11, ஜனநாயகப் படுகொலையை கண்டித்து சத்தியாகிரகம் நடத்துகிறார்களாம்? விளங்கி விடும் ஜனநாயகம்?.

அப்புடியே 33 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுங்க நாடாளுமன்றத்திலும் ஒரு குத்தாட்டம் பார்க்கலாம்,  உள்ளிருப்பு போராட்டம் நடத்துனா ஒரு குழு டான்ஸ் பார்க்க உதவும்ள்ள.

ஏற்கனவே வலுவான எதிர்கட்சி இல்லாமல் சிக்கிச்  சீரழிந்து வரும் இந்திய ஜனநாயகத்தை தூக்கி நிறுத்துகிறேன் என்று ப.ஜ.க நடத்திய சத்தியாகிரகத்தில் நடந்த கூத்துதான் இந்த சம்பவம்.

ஏன் இந்த நடனம் என்று கேட்டால் "உயிருள்ளவரை தேசபக்தி பாடலை கேட்டால் டான்ஸ் ஆடிக்கொண்டே இருப்பேன்" என்று சொல்கிறார் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர்.

சுஷ்மா சுவராஜிடம் இவ்வளவு திறமை கொட்டிக் கிடப்பதை பாலிவுட் இதுவரை அறியாமல் போனது பெரும் இழப்பு. சுஷ்மாவின் கட்சியே நாட்டியக்காரர்களின் கட்சியாகி விட்டது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

காந்தியின் சமாதியில் ஆட்டமும், பாட்டமும் அடுக்குமா என்ற கேள்விக்கு சுஷ்மா காட்டமாக பதிலளித்திருக்கிறார். ‘தொண்டர்கள் கோரசாக தேசபக்தி பாடல்களை பாடினார்கள். அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஆடினேன். எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் ஆடுவேன். அது என் உரிமை’ என்கிறார்.

அகிம்சை போராட்டம் என்று அறிவிப்பு கொடுத்துவிட்டு ‘தொண்டர்கள் எல்லாரும் துப்பாக்கி ஏந்தி வாருங்கள், ராம்லீலா மைதானத்தில் நாம் ராவண லீலா அரங்கேற்றலாம்’ என்று பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறார் காவியுடை தரித்த சாமியார் ராம்தேவ்.

அவருக்கு ஆதரவு தெரிவிக்க காந்தி சமாதியில் புறப்பட்டு ஹரித்வார் ஆசிரமத்தை அடைந்திருக்கிறார் சுஷ்மா. இவர்களின் யாத்திரையின் இலக்கு தெளிவாகவே தெரிகிறது.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று சொல்வார்கள் ஏற்கனவே அழிந்துவரும் ப.ஜ.க கட்சியை இவர் போட்ட ஆட்டம் ஏறக்குறைய முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்றே சொல்லலாம்.

No comments: