![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHD30GQD67JkcpTWNsm0DXX8QBd3n34zd8UsamiaxjEdleuB2IsZbpEhrxUV_rYEAcnI_3Oa0OQxnxHRuBZZHNHeo5HzN3MepOgRDkozbwX25WoBeS7gVQyM5tzgIe8odF86ZT3yOYwNw/s200/Naam%252520Tamilar.jpg)
ஈழத் தமிழினத்தை முற்றாக அழிக்கும் நோக்குடன் நடத்தப்பட்ட இனப் படுகொலைப் போரில் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல பத்தாயிரக்கணக்கான தமிழப் பெண்கள் விதவையாக்கப்பட்டுள்ளனர்.
தமிழப் பெண்கள் விதவையாக்கப்பட்டுள்ளனர். பெரும் பாலியல் கொடுமைக்கு தமிழ்ப் பெண்கள் இன்றளவும் ஆட்படுத்தப்படுகின்றனர். தமிழீழ தேசம் சிங்களத்தின் ஆக்கிரமிப்பிறகு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இன்னமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முள்வேலி முகாம்களுக்குள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி வாழ்ந்து வருகின்றனர். தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு தமிழ் மண்ணில் குடியேற்றப்படும் சிங்கள மக்களுக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது.
ஐ.நா.நிபுணர் குழு பரிந்துரையின்படி, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலக அளவில் எழுந்துள்ளது. அந்தக் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் வகையில் தமிழக அரசு, இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலையே என்றும், அந்த மக்களுக்கு அரசியல் ரீதியான நியாயம் கிடைக்க பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அதற்கு இந்திய அரசு முழுமையாக துணை நிற்க வேண்டும் என்றும் கோரும் விரிவான தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் நாம் தமிழர் கட்சி வேண்டுக்கோள் வைக்கிறது
1 comment:
விரைவில் தெரிந்து விடும் நாம் அனுப்பும் கடிதங்கள் வேண்டு கோள்கள், கோரிக்கைகள் எங்கே போய் சேரும் என்று.
Post a Comment