May 20, 2011

இலங்கை விடயத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பனியுத்தம்!

May 21, துப்பாக்கியுடன் சிறிலங்காவுக்குள் நுழைய முயன்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இரு அமெரிக்கர்களும் அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு 10.40 மணியளவில் கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த கட்டார் எயர்வேய்ஸ் விமானத்தில் வந்த போதே இரண்டு அமெரிக்கப் படையினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அமெரிக்காவில் இருந்தே விமானத்தில் புறப்பட்டுள்ளனர். இவர்களின் பைகளை ஸ்கானரில் சோதனையிட்ட போது அதற்குள் துப்பாக்கி ஒன்று பாகம் பாகமாக கழற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எம்-16 ரகத் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றும் இவர்கள் இருவரும் விடுமுறையைக் கழிக்கவே சிறிலங்கா வந்தாகக் கூறியுள்ளனர்.

விடுமுறையைக் கழிக்க வந்தவர்கள் எதற்காக துப்பாக்கியுடன் வந்தனர் என்று சந்தேகம் எழுந்துள்ளது. விமானத்தில் துப்பாக்கியை கொண்டு செல்வது சட்டப்படி குற்றம் என்பதைத் தெரிந்தே அவர்கள் அதை பாகமாக கழற்றி மறைத்து வந்துள்ளனர்.

மிகவும் இறுக்கமான பாதுகாப்பு முறைகள் கடைப்பிடிக்கப்படும் அமெரிக்க விமான நிலையங்களின் கண்காணிப்பில் இருந்து தப்பி இவர்களால் எவ்வாறு துப்பாக்கியை மறைத்து கொண்டு வந்திருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதன்காரணமாக சிறிலங்கா காவல்துறையின் உயர் அதிகாரிகள் குழுவொன்று இரு அமெரிக்கப் படையினரிடமும் கடுமையான விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் சிறிலங்காவில் இரகசிய நடவடிக்கை எதையும் மேற்கொள்ளும் திட்டத்துடன் வந்துள்ளனரா என்பது பற்றியும் விசாரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் அண்மைக்காலமாக விரிசல்கள் இருந்து வரும் நிலையில் இந்த விவகாரம் மேலும் சர்ச்சையைத் தோற்று விக்கலாம் என்று கருதப்படுகிறது.

சிந்திக்கவும்: ஸ்ரீலங்கா சீனாவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. இந்தியா ஈழபோராட்டத்தை அழிக்க லங்காவிற்கு உதவி செய்து லங்காவில் தன்னுடைய ராணுவ கேந்திரமாக பயன்படுத்தலாம் என்று பார்த்தது.

ஆனால் ஏமாந்து போனது லங்கா இந்தியாவை விட சீனாவே வல்லரசு என்பதால் இந்தியாவை கலட்டி விட்டு விட்டது. இந்திரா காந்தி சிறந்த ராஜதந்திரி அவர் புலிகளுக்கு ராணுவ பயிற்சி அளித்து இலங்கை அரசுக்கு ஒரு நிரந்தர தலைவலியை கொடுத்து வந்தார்.

இப்படி ஒரு அணி அங்கு இருந்தால்தான் மற்ற நாடுகள் உள்ளே புக மாட்டார்கள் என்று கருதினார். இலங்கை ஒரு பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த நாடு அதன் மீது வல்லரசுகளுக்கு ஒரு கண்.

நெடுங்காலமாக லங்காவுக்காக காத்திருந்த கொக்கான அமெரிக்காவுக்கு நேற்றுவந்த சீனா அதை கொத்தி சொல்ல விடுமா?
அதுவல்லாமல் அமெரிக்காவை பற்றி ராஜபக்சே பேசியதைதான் மறக்க முடியுமா?

அதனால் சீக்கிரம் இருக்கிறது ராஜதந்திர விளையாட்டு. அது அதற்க்கான ஒரு தொடக்கமே இது. சீக்கிரம் ராஜபக்சேவுக்கும், சீனாவுக்கும், இந்தியாவுக்கும் சீக்கிரம் தொடர் அடிகள் காத்திருகின்றன என்றே அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

4 comments:

Anonymous said...

யானைகள் தமது நலன்களுக்காக மோதும் போது பாவம் அங்கே பாதிக்கப்படுவது எலிகளே. சிங்களவனின் ராஜதந்திரம் தோற்கும் நிலை விரைவில் ஏற்படப் போகின்றது.

Anonymous said...

ஒரு நாட்டில் எத்தனை சமூகங்கள் இருந்தாலும் அத்தனை சமூகங்களுக்கும் அதனதன் உரிமைகளை கொடுத்து
அவர்களின் இன்னபிற காரியங்களிலும் அவர்களை ஆட்சி செய்யும் அரசு பாதுகாப்பு கொடுக்க உறுதி கொள்ள
வேண்டும். ஒரு நாட்டில் காவல் துறைதான் நீதித்துறையின் முதல் வாயில்

அந்தக்காவல் துறை செவ்வனே அமைந்து விட்டால் வகுப்பு வாதத்திற்கும், இனச்சண்டைக்கும் வேலையே இல்லை. ஆனால் நாட்டை ஆள்பவர்களிலிருந்து, காவல் துறை வரை எல்லாருமே, ஜாதி, மத கண் கொண்டே பிரச்னைகளை அணுகுவதால்தான் கோளாறே.

காவல் துறைக்கு TECHNICAL TRAINING கை விட TRAINING IN MORALE அவசியம் - MOHAMED THAMEEM

Anonymous said...

ஒரு நாட்டில் எத்தனை சமூகங்கள் இருந்தாலும் அத்தனை சமூகங்களுக்கும் அதனதன் உரிமைகளை கொடுத்து
அவர்களின் இன்னபிற காரியங்களிலும் அவர்களை ஆட்சி செய்யும் அரசு பாதுகாப்பு கொடுக்க உறுதி கொள்ள
வேண்டும். ஒரு நாட்டில் காவல் துறைதான் நீதித்துறையின் முதல் வாயில்

அந்தக்காவல் துறை செவ்வனே அமைந்து விட்டால் வகுப்பு வாதத்திற்கும், இனச்சண்டைக்கும் வேலையே இல்லை. ஆனால் நாட்டை ஆள்பவர்களிலிருந்து, காவல் துறை வரை எல்லாருமே, ஜாதி, மத கண் கொண்டே பிரச்னைகளை அணுகுவதால்தான் கோளாறே.

காவல் துறைக்கு TECHNICAL TRAINING கை விட TRAINING IN MORALE அவசியம்
இது இந்தியா போன்ற பல சமூக அமைப்புள்ள நாட்டிற்கு மிக அவசியமானது - MOHAMED THAMEEM