May 25, திகார் சிறை எண் 6-இல் அடைக்கப்பட்டிருக்கும் கனிமொழிக்கு மின்விசிறி, தொலைக்காட்சி, தினசரிகள், கட்டில் போன்ற வசதிகளெல்லாம் அளிக்கப்பட்டிருக்கின்றன.இதுவே சாதாரண விசாரணைக் கைதிகளென்றால் ஜட்டியுடன் நிற்கவைத்து மிரட்டி உருட்டி அனுப்புவார்கள்.
பிளாக்கில் நுழைந்த உடனே சீனியர் கைதிகள் என்னென்ன வேலை செய்ய வேண்டுமென்று பட்டியலிடுவார்கள்.
அதில் செல்லை பெருக்கி துடைப்பதும், கழிப்பறையை சுத்தம் செய்வதும் முதலில் இருக்கும்.
ஆனால் மேன்மக்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் எதுவுமில்லை. ரயில், விமானம் முதல் சிறைவரை இவர்களுக்கு முதல் இடம்தான்.
சிறை என்பது ஒரு மனிதன் திருந்துவதற்க்கான இடமாக இருக்கவேண்டுமே அல்லாமல் மீண்டும் குற்றம் செய்ய தூண்டுவதாக அமைந்துவிட கூடாது. அதிலும் ஏழை பணக்காரன் பாகுபாடோடு இருக்குமே ஆனால் அதைவிட கேடு இந்த நாட்டிற்கு வேறு ஒன்றும் இல்லை.

3 comments:
YES YOU ARE RIGHT. WE NEED JUSTICE FOR ALL.
- MOHAMED THAMEEM
please place me in the same room!
veliyil iruppavan ellam yokkiyana?
Post a Comment