புதுடெல்லி: சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட குண்டுவெடிப்பு வழக்குகளில் அளித்த வாக்குமூலத்தை ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தா வாபஸ் பெற்றாலும் நீதிமன்றம் அதனை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளும் என கருதப்படுகிறது.
வழக்கில் குற்றவியல் நடவடிக்கை சட்டம் 154-பிரிவின்படி மாஜிஸ்ட்ரேட் முன்பு முன்னர் அளித்த வாக்குமூலத்திலிருந்து வாபஸ் பெறுவது அவ்வளவு எளிதானல்ல என சட்டவல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் முன்பு அளித்த வாக்குமூலத்தை வேண்டுமானால், நிர்பந்தம் மற்றும் சித்திரவதையின் காரணமாக வாக்குமூலம் அளித்தேன் என கூறி மறுத்தால் நீதிமன்றம் அங்கீகரிக்க வாய்ப்புள்ளது.
ஆனால், மாஜிஸ்ட்ரேட் முன்பு அளித்த வாக்குமூலத்தை வாபஸ் பெற்றால் நீதிமன்றம் அதனை அங்கீகரிக்காது. மட்டுமல்ல, அஸிமானந்தாவின் மீது நீதிமன்றத்தை தவறாக புரிந்துக்கொள்ள வைத்ததாக இன்னொரு வழக்கும் தொடரப்படும்.
முன்னாள் பா.ஜ.க தலைவர் ஹிந்துத்துவா பயங்கரவாதி உமாபாரதி அஜ்மீர் சிறையில் வைத்து ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் சந்தித்த பிறகே அஸிமானந்தா குண்டுவெடிப்பு வழக்குகளில் ஏற்கனவே அளித்த வாக்குமூலத்தை வாபஸ் பெற்றுள்ளார்.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு நாச வேலைகளில் தங்களுடைய தலைவர் இந்திரேஷ்குமார் உள்ளிட்டவர்களுக்கு பங்குண்டு என அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் நிம்மதி பெருமூச்சுவிட்டது.
அஸிமானந்தாவின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே என்.ஐ.ஏவும், சி.பி.ஐயும் வழக்குகளை விசாரிக்கின்றன என்ற எண்ணத்தில் ஆர்.எஸ்.எஸ் இருந்து வந்தது.
ஆனால், வாக்குமூலத்தின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் கண்டுபிடிக்கப்பட்டன.
சில ஆவணங்கள் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களிலிருந்து கிடைத்ததாகவும், அவை சங்க்பரிவார் தலைவர்களின் தொடர்பை ஊர்ஜிதப்படுத்துவதாகவும் புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்தனர்.
குண்டுவெடிப்பிற்கு தேவையான பொருட்களை வாங்கிய கடைகளையும் புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனடிப்படையில் அஸிமானந்தா வாக்குமூலத்தை வாபஸ் பெற்றாலும், குண்டுவெடிப்புகளில் சங்க்பரிவாரத்தின் பங்கு நிரூபிக்கவியலும் என என்.ஐ.ஏ உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு தொடர்பான விபரங்களை இந்தியா-பாகிஸ்தான் உள்துறை செயலாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது இந்தியா பாகிஸ்தானிடம் ஒப்படைத்திருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment