எப்ரல் 2, அதிமுக கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறியதால் பெரிய பாதிப்பில்லை என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் ரங்கராஜன் கூறினார்.
தேர்தல் கமிஷன் அனைத்து விதிமுறைகளையும் சுணக்கமின்றி அமல்படுத்த வேண்டும். சென்னை ஐகோர்ட்டும், சந்தேகத்தின் பேரில் எங்கு வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம் என, தேர்தல் கமிஷனுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கியுள்ளது.
எனவே, தேர்தல் கமிஷன் உறுதியாக தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும்.
இலவசங்கள் எப்படி வழங்க முடியும்? கேபிள் டிவியை எப்படி அரசுடைமையாக்குது என்பது குறித்து, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.
வைகோ கூட்டணியில் இருக்க நானும், என் கட்சியினரும், அ.தி.மு.க.,வும் முயற்சி எடுத்தோம். அம்முயற்சி பலன் அளிக்கவில்லை. வைகோ வெளியேறியதால் பெரிய பாதிப்பில்லை என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment