மும்பை, ஏப். 2- இந்தியாவும் இலங்கையும் இன்னும் கொஞ்ச நேரத்தில் உச்சகட்ட போட்டியை சந்திக்கவுள்ளது யாருக்கு இந்த பம்பர் இன்னும் சிலமணிநேரத்தில் தெரிந்துவிட்டும்
கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு இந்திய அணி உலக கோப்பையை வென்றது இல்லை. 2003-ம் ஆண்டு இறுதிப்போட்டி வரை வந்து ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை வீழ்த்தி இந்தயா 2-வது முறையாக உலக கோப்பை கனவை நனவாக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் கோப்பையை வெல்லும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கையை எப்படி வீழ்த்தும் என்ற பரபரப்பில் ரசிகர்கள் உள்ளனர். இறுதிப்போட்டி ஆர்வம் இந்தியா முழுவதும் களைகட்டி உள்ளது.
இந்தியாவின் வெற்றிக்காக நாடு முழுவதும் பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது. இறுதிப்போட்டியை காண வி.ஐ.பி.க்கள் மும்பையில் திரண்டு உள்ளனர். ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், இலங்கை அதிபர் ராஜபக்சே ஆகியோர் இறுதிப்போட்டியை நேரில் ரசிக்கிறார்கள். ராகுல்காந்தியும் இறுதிப் போட்டியை பார்க்க மும்பை செல்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆசாமில் பிரசாரம் செய்வதால் இறுதிப்போட்டியை பார்க்க செல்லவில்லை. அவர் இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
மொகாலியில் பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதி போட்டியை அவரும், ராகுல்காந்தியும் நேரில் ரசித்தனர். இதேபோல மத்திய மந்திரிகள், முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், பாலிவுட் பிரபலங்கள் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் திரண்டு உள்ளனர்.

No comments:
Post a Comment