ஏப்ரல் 13, தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 234 தொகுதிகளிலும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வசிப்பதால் அத்தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஷ் கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இந்த தொகுதியில் அதிமுக சார்பில் வளர்மதி போட்டியிடுகிறார்.
தேமுதிக தலைவர் விஜய்காந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
விஜயகாந்த் சென்னை சாலிகிராமத்தில் வசிக்கிறார். இது விருகம்பாக்கம் தொகுதியில் வருகிறது. அவர் சாலிகிராமம் ஆவிச்சி பள்ளியில் ஓட்டு போட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment