நாக்பூர் ஏப்ரல் 4-அமெரிக்க எழுத்தாளர் ஜோசப் வேலிவெல்ட் மகாத்மா காந்தி பற்றி புதிய புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.
இந்த புத்தகத்தில் காந்தி இருபால் உறவு கொள்பவர் என்று அதில் குறிப்பிட்டுள்ளதாகவும் மற்றும் பல்வேறு அவதூறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. புத்தகம் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில் புத்தகம் தொடர்பாக மராட்டிய சட்ட மேலவையில் விவாதம் நடந்தது. அப்போது பல உறுப்பினர்களும் மராட்டிய மாநிலத்தில் சர்ச்சைக்குரிய புத்தகத்தை தடை விதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
இதை போல் குஜராத் மாநிலத்திலும் அப்புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் இப்புத்தகத்திற்கு மத்திய அரசு தடைவிதிக்காது என்று சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி இன்று நாக்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அந்த புத்தகத்தை எழுதிய அமெரிக்க எழுத்தாளரே மகாத்மாவைப் பற்றி அவதூறான கருத்துகள் எதுவும் எழுதவில்லை என மறுத்துள்ளதாக அவர் கூறினார்.
நாடு முழுவதும் கடும் விளைவுகளை ஏற்படுத்திய காந்தி தொடர்பான அந்த கருத்துகள், மொழிபெயர்ப்பாளர்களால் எழுதப்பட்ட புத்தக விமர்சனம் என்று கூறினார் மொய்லி.
புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுபவை தான் எழுதியதல்ல என அந்த எழுத்தாளரே விளக்கம் அளித்துள்ளதால் அதைத் தடை செய்யும் கேள்விக்கே இடமில்லை என தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment