மார்ச் 21,:வியகாந்தின் தேர்தல் வாக்குறுதி எப்படி? இருக்கும் என்று ஒரு கற்பனை. பொது மக்களே எங்களை ஜெயிக்க வைத்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாருக்கும் ஒரு பம்பரம் இலவசமாக கொடுப்போம். இதை நீங்கள் தொப்புளில் விட்டு மகிழ்ச்சி அடையலாம்.
அதுபோல் நீதி மன்றங்களை எல்லாம் மூடி விட்டு கிராமங்கள் தோறும் நாட்டாமைகளை நியமிப்பேன். நீங்களும் நாட்டாமை தீர்ப்பை மாற்றி எழுது என்று சொல்லி கேட்டு குதுகளிக்கலாம். இனி நான் நடித்த படங்களை இலவசமாக பார்க்க வகை செய்வேன்.
எனது படம் ஓடும் தியட்டர்களின் டிக்கெட்களை அரசு செலவில் வாங்கி நீங்கள் இலவசமாக படம் பார்க்க ஏற்பாடு செய்வேன். நீதான் கூட இருந்து ஊற்றிக் கொடுத்தாயா?” என்று ஜெயா அம்மாவை பார்த்து எகத்தாளம் பேசிய நான், எப்படி? அம்மாவிடம் கைகட்டி, அடங்கி, ஒடுங்கி போயஸ் தோட்டத்தின் காவலாளியாக நிற்கிறேன் என்கிற ராணுவ ரகசியத்தை மட்டும் கேட்காதீர்கள்.
எனது வீரவசனம் எல்லாம் படத்தில் மட்டும்தான். உங்களை எப்படி? ஏமாற்றினேன் இல்லாத தீவிரவாதியை அழிக்க போவதாக தேசபக்தி முகமூடி போட்டு படங்களில் நடித்தேன். அதைவைத்து கட்சி தொடங்கி 41 சீட்டுகள் வாங்கினேன். தயவு செய்து இது போன்ற ரகசியத்தை மட்டும் கேட்காதீர்கள். ஏன் என்றால்? எதிர் காலத்தில் உங்களுக்கும் கட்சி தொடங்கும் ஆசை வந்துவிடும்.
எனக்கு முன் கட்சி தொடங்கி அரசியலில் போர் வாளாக திகழ்ந்தவரை நேற்று பொய்த மழையில் இன்று முளைத்த காளான் ஆகிய நான் எப்படி? பின்தள்ளினேன் பார்த்தீர்களா? நடிகை தொப்புளில் பம்பரம் ஓட்டியே 41 சீட்டு வாங்கிட்டேன். இப்பவாவது என்னை கருப்பு எம்ஜிஆர் என்று ஒத்துக்கொள்ளுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நடிகை தொப்புளில் பம்பரம் ஓட்டியே 41 சீட்டு வாங்கிட்டேன். இப்பவாவது என்னை கருப்பு எம்ஜிஆர் என்று ஒத்துக்கொள்ளுங்கள் --- கன்டிப்பா...
Post a Comment