Mar 20, 2011

காமடி பீசாகிப்போன கம்யூனிஸ்ட்டுகள்!!

மார்ச் 21: கம்யூனிசத்தை தமிழகத்தில் கேலிப்பொருளாக்கியது புரட்சித் தலைவி அன்றி வேறு யார்? டெல்லியிலிருந்து விமானத்தின் மூலம் வரும் பிரகாஷ் காரத், அடையாறில் விலை உயர்ந்த பொக்கே வாங்கிய தோழர்கள் எல்லாம் அம்மாவுக்காக சுத்தமான உடையணிந்து போயஸ்தோட்டத்தில் பார்த்து ஒப்பந்தம் போடுகிறார்கள்.

அத்தோடு விசயம் முடிந்துவிடவில்லை. தி.மு.க, காங்கிரசு கூட்டணி முறிவது போலானால் எங்கே அம்மா விரட்டி விடுவாரோ என்று பதட்டத்தில் இருக்கிறார்கள். பத்து சீட்டு, பன்னிரெண்டு சீட்டு வாங்குவதற்குள் படாதபாடு பட்டார்கள்.

பிறகு கேட்ட தொகுதிகள் கிடைக்க தவம் இருக்கிறார்கள். அதையும் தாண்டி அம்மா அந்த சீட்டுகளில் அ.தி.மு.க வேட்பாளர்களை நிறுத்திய பிறகு செய்வதறியாது திகைக்கிறார்கள். இதற்காக தொப்புளில் பம்பரம் விட்ட தலைவனிட மெல்லாம் ஆலோசனை கேட்கிறார்கள்.

அந்த தலைவனை வைத்தாவது மூன்றாவது அணி என்று ஒப்பேத்த முடியுமா? என்று கசப்புடன் பேசுகிறார்கள். இப்படி கம்யூனிஸ்ட்டுகளின் நிலைமை கேவல பட்டு போகிவிட்டது. இவர்களை போலி கம்னிஸ்டுகள் என்று வினவு சகோதரர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.

2 comments:

ஊரான் said...

“கருப்புக் குட்டிய விட சிவப்புக் குட்டிங்க செம கில்லாடிங்க. கெடச்சத கவ்விட்டு போனது படத்துல சொன்ன செம மெசேஜ்”.

மேலும் சிரிக்க...
"முள்ளுக்காட்டில் மல்லுக்கட்டு!" த்ரில்லர் பட கருத்துக் கணிப்பு:
http://hooraan.blogspot.com/2011/03/blog-post_21.html

Ganesh said...

வேறு ஒருவரைப் பார்க்கப் போகும்போது சுத்தமான ஆடைதானே அணியணும்? ? "சிந்திக்கவும்" சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்கு போலருக்கே..?