மார்ச் 21: பாபர் மசூதி இடிப்பைப் பற்றி இன்னும் எத்தனை விதமாகப் பேசி பாஜக சங்க பரிவாரம் மக்களைக் குழப்பும் என்பது தெரியவில்லை. பாபர் மசூதி இடிப்பால் பாஜக மக்களது ஆதரவை இழந்தது என்றும் அத்வானி திருவாய் மலர்ந்துள்ளார்.
மசூதி இடிக்கப்பட்டது பெரிய சோகம் என்றும், மசூதி இடிக்கப்பட்ட தினத்தன்று நடந்த நிகழ்வுகளுக்கு யாரும் பொறுப்பேற்க முடியாது என்றும் அத்வானி கூறியுள்ளார். அத்துடன் அயோத்தி இயக்கத்தில் தான் பங்கு பெற்றதைப் பெருமையாகவேக் கருதுவதாகவும் ஹிந்துத்துவா பயங்கரவாதி அத்வானி கூறியுள்ளார்.
இம்மாதிரி பேச்சுக்கள் குற்றம் நடந்து இருபது வருடங்களுக்குப் பின்னர் பேசப்படுகின்றது என்பதை நினைவில் கொள்வோம். ஏனெனில், ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை நடத்தியது இவர்தான். தான் சென்ற பாதையெல்லாம் தனக்குத் தானே மனித ரத்தத்தால் அபிஷேகம் செய்து கொண்டவரும் இவர்தான். அப்போது நடந்த கலவரங்களில் மட்டும் 564 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் என்று விக்கிபீடியா இணையதளம் கூறுகின்றது.
இனி இந்திய வரலாற்றை எழுதும்போது 1947க்கு முன் பின் என்று எழுதாமல் '1992 டிசம்பர் 6க்கு முன், அதற்குப் பின்' என்று எழுத வேண்டும் என்றவரும் இவர்தான். மேற்கொண்டு பார்க்கும் முன் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான சதி வழக்கு இன்னும் அத்வானி மீது நிலுவையில் இருக்கின்றது என்பதை மனதில் கொள்வோம்.
பாஜக தலைவர்களில் ஒருவரான வினய் கத்தியாருடன் சேர்ந்து மசூதியை இடிப்பதற்கு அத்வானி சதி செய்ததாக அத்வானியின் மருமகள் கௌரி அத்வானி லிபரான் கமிஷனிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்வானியின் மருமகள் கௌரி அத்வானியை சேற்றில் முளைத்த செந்தாமரை என்று கூறலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment