Mar 17, 2011

மூன்றாவது அணியில் யார்? யார்?

மார்ச் 17,: வைகோவும், விஜயகாந்தும் இணைந்து 3வது அணியை உருவாக்க வேண்டும். அந்த அணியில் இணைய எங்கள் கட்சி தயாராக உள்ளது என, நடிகர் கார்த்திக் கூறியுள்ளார். கூட்டணி கட்சிகளை ஜெயலலிதா அவமரியாதை செய்துள்ளார்.

வைகோ, விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு தொகுதிகள் ஒதுக்கும் முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அவரின் அகம்பாவத்தை காட்டுகிறது. கூட்டணி கட்சிகள் தயவு இல்லாமல் அ.தி.மு.க.வால் ஆட்சியை பிடிக்க முடியாது. தமிழக மக்கள் இன்னொரு அணியை எதிர் பார்க்கிறார்கள்.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி அமைக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் தா.பாண்டின், ஜி.ராமகிருஷ்ணன், கிருஷ்ணசாமி, சேதுராமன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதிமுக போட்டியிடும் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில், அதிக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அ.தி.மு.க., தன்வசமாக்கி கொண்டதாக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதையடுத்து தங்களைப் போல் தொகுதி பங்கீட்டில் அதிருப்தி அடைந்துள்ள தேமுதிக தலைமையில் மூன்றாவது அணியை ஏற்படுத்தி தேர்தலை சந்திக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டது. இதில் வைகோவை இணைத்து கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூன்றாவது அணி அமைக்கப்பட்டால் அதில், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, புதிய தமிழகம், முவேந்தர் முன்னேற்ற கழகம், பார்வடு பிளாக், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் ஒன்றிணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிந்திக்கவும்: கருணாநிதி தமிழர் துரோகி, ஜெயலலிதா தமிழர் விரோதி, காங்கிரஸ் சிங்கள ஆதரவு போர் குற்றவாளி. அது மட்டுமல்லாமல் இவர்கள் பெரும் ஊழல் பெரிச்சாளிகள் கூட. பாரதிய ஜனதா பார்ட்டி ஒரு ஹிந்துவா பயங்கரவாதிகள். இப்படி இவர்களை விட்டு விட்டு மூன்றாவது அணி அமைப்பது என்பது ஒரு சிறந்த மாற்றம் என்றே கருதலாம்.

2 comments:

rajamelaiyur said...

We need change. . If you are a true tamilan you must vote to vijaykanth.

rajamelaiyur said...

Last paragraph is very very true