சென்னை, மார்ச் 16: 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரும் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கிரீன் ஹவுஸ் நிறுவன அதிபருமான சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள செய்தி பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது கேள்விக்குரியதாகும். சாதிக் பாட்சாவின் மர்ம மரணம் குறித்து மத்திய புலனாய்வுத்துறை தீவிர விசாரணையை உடனடியாக நடத்திட வேண்டுமென்றும், உண்மை விவரங்களை நாட்டுக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்திட வேண்டுமென்றும், மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி
உள்ளது.
2ஜி ஊழலில் தொடர்புடைய ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மரணம் அடைந்துள்ளதாகவும், எனவே ஆ.ராசாவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
சிந்திக்கவும்: சாதிக் பாட்சா திமுகவிற்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த உழலில் இருந்து கருணாநிதி குடும்பம் தப்பிக்க செய்யப்படும் சதி என்றும் நடுநிலையாளர்கள் கருத்து.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கொன்னுட்டாங்களா...?
Post a Comment