Mar 19, 2011

லிபியா மீது ராணுவ நடவடிக்கை! ஒபாமா உத்தரவு!!

வாஷிங்டன்: ஆப்ரிக்க கண்டத்தை சேர்ந்த லிபியாவில் நடைபெற்று வரும் அதிபர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை அடக்குவதற்காக அதிபர் கடாபி ராணுவ விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கி வருகிறார்.

இந்நிலையில் அந்நாட்டின்மீது ராணுவநடவடிக்கை எடுக்க ஐநாபாதுகாப்பு சபை அனுமதி அளித்தது. இந்நிலையில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த போர் விமானங்கள் லிபியாவின் பென்காசி நகரில் விமானங்கள் குண்டுமழை பொழிந்தது. இதனையடுத்து அமெரிக்காவும் ராணுவ நடவடிக்கை எடுக்க அதிபர் ஒபாமா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1 comment:

Anonymous said...

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்கள் இந்த உலகத்தினை மீண்டும் மறுபங்கீடு செய்யும் புதிய அணுகுமுறையாகவே லிபியா மீது தாக்குதல் தொடங்கியிருக்கிறார்கள் . ஆனால் இந்த முயற்சியும் தோல்வியில்தான் முடியும்.
Nalliah Thayabharan