லண்டன்: 21-ம் நூற்றாண்டின் கம்ப்யூட்டர் உலகின் ஜாம்பவனான பில்கேட்சின் காட்டிலும் நுண்ணறிவுத் திறனில் முன்னிலை வகிக்கிறார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 11 வயது மாணவி ஒருவர். இங்கிலாந்தை சேர்ந்தவர் விக்டோரியா கவ்வி. இவர் மற்ற மாணவிகளைப் போன்ற வயதுடையவராக இருப்பினும் மற்றவர்களிட மிருந்து வேறுபட்டு காணப்படுகிறார். காரணம் இவரிடம் காணப்படும் அபரிமிதமான அறிவுத்திறனே.
பல ஆயிரம் கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரரான விஞ்ஞானி ஆல்பர்ட் ஐஸ்டீனின் நுண்ணறிவுத்திறன் அளவு 160. பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரும் இதே விகித்தை கொண்டுள்ளனர். ஆனால் விக்டோரியாவின் நுண்ணறிவுத் திறனின் அளவு 162 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விக்டோரியாவிடம் கேட்ட போது எனக்கு இப்படி ஒரு திறமை இருப்பது நம்ப முடியாத ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார்.
இவரின் நுண்ணறிவுத் திறனுக்கு முன்னால் பல அறிஞர்களின் அறிவித்திறனின் அளவுகள் பின்தங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மாவீரன் நெப்போலியனின் நுண்ணறிவின் அளவு 145, சிக்மண்டு பெர்ரடு 156, மடோனா 140, ஹிலாரி கிளிண்டன் 140 பில் கிளிண்டன் 135, நிக்கோலே கிட்மன் 132 என அனைத்து தரப்பினரும் இம் மாணவிக்கு பின்னரே வருகின்றனர்.
புதிர் போட்டியில் அதிக விருப்பம் உள்ளது என தெரிவிக்கும் மாணவி விக்டோரியாவின் விருப்பம் தாவரவியல் பிரிவில் பட்டம் பெற வேண்டும் என்பதே ஆகும். இவரின் பெற்றோர் டேவிட் ஆலிசன் தம்பதியினர் வோல்வர்ஹாம்ப்டன் பகுதியை சேர்ந்த கிளாவர்லி நகரில் வசித்து வருகின்றனர். விக்டோரியா தனது வயதுக்கேற்ற குறும்பு தனத்துடன் மட்டுமல்லாது பாடுவது.நடனம், பியானோ, சாக்ஸோபோன் இசைப்பது, நீந்துவது போன்றவற்றிலும் சிறந்து விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment