சென்னை:திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர் பட்டியல் மார்ச் 17-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. மேலும் கூட்டணி கட்சிகளான கொங்குநாடு முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகள் மாவட்ட வாரியாக:
திருவள்ளூர் மாவட்டம்: திருத்தணி, பூந்தமல்லி (தனி), ஆவடி = சென்னை மாவட்டம்: திரு.வி.க. நகர் (தனி), ராயபுரம், அண்ணா நகர், தியாகராய நகர், மயிலாப்பூர் = காஞ்சிபுரம் மாவட்டம்: ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), மதுராந்தகம் (தனி) = வேலூர் மாவட்டம் : சோளிங்கர், வேலூர், ஆம்பூர் = கிருஷ்ணகிரி மாவட்டம்: கிருஷ்ணகிரி, ஓசூர். = திருவண்ணாமலை மாவட்டம்: செங்கம் (தனி), கலசப்பாக்கம், செய்யாறு.
விழுப்புரம் மாவட்டம்: ரிஷிவந்தியம் = சேலம் மாவட்டம்: ஆத்தூர் (தனி), சேலம் வடக்கு = நாமக்கல் மாவட்டம் : திருச்செங்கோடு = ஈரோடு மாவட்டம்: ஈரோடு மேற்கு, மொடக் குறிச்சி = நீலகிரி மாவட்டம் : உதகமண்டலம் = கோவை மாவட்டம்: வால்பாறை (தனி), தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர் = திருப்பூர் மாவட்டம் : திருப்பூர் தெற்கு, காங்கேயம், அவினாசி (தனி).
திண்டுக்கல் மாவட்டம்: நிலக்கோட்டை (தனி), வேடசந்தூர் = கரூர் மாவட்டம் : கரூர் = திருச்சி மாவட்டம் : மணப்பாறை, முசிறி = அரியலூர் மாவட்டம் : அரியலூர் = கடலூர் மாவட்டம் :விருத்தாசலம். நாகை மாவட்டம் : மயிலாடுதுறை. திருவாரூர் மாவட்டம்: திருத்துறைப்பூண்டி (தனி). தஞ்சாவூர் மாவட்டம்: பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி.
புதுக்கோட்டை மாவட்டம்: திருமயம், அறந்தாங்கி. சிவகங்கை மாவட்டம்: காரைக்குடி, சிவகங்கை. மதுரை மாவட்டம்: மதுரை வடக்கு, மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம்.
விருதுநகர் மாவட்டம்: விருதுநகர். ராமநாதபுரம் மாவட்டம் : பரமக்குடி (தனி), ராமநாதபுரம்.
தூத்துக்குடி மாவட்டம்: விளாத்திக்குளம், ஸ்ரீவைகுண்டம். திருநெல்வேலி மாவட்டம்: வாசுதேவநல்லூர்(தனி), கடையநல்லூர், நாங்குநேரி, ராதாபுரம். கன்னியாகுமரி மாவட்டம் : குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர்.
பாமக போட்டியிடும் 30 தொகுதிகள்: திருப்போரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆர்க்காடு, போளூர், ஜோலார்பேட்டை, செஞ்சி, மயிலம், நெய்வேலி, மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, பவானி, தருமபுரி, பூம்புகார், திண்டுக்கல், ஆலங்குடி, மதுரவாயல், அணைக்கட்டு, ஜெயங்கொண்டம், பர்கூர், வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி, புவனகிரி, கோவில்பட்டி, திண்டிவனம், சோழவந்தான், வேதாரண்யம், பரமத்திவேலூர், பாலக்கோடு.
விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 10 தொகுதிகள்: சோளிங்கநல்லூர், உளுந்தூர்பேட்டை செய்யூர்(தனி), அரக்கோணம்(தனி), கள்ளக்குறிச்சி(தனி), திட்டக்குடி(தனி), காட்டுமன்னார்கோயில்(தனி), சீர்காழி(தனி), அரூர்(தனி), ஊத்தங்கரை(தனி).
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் 3 தொகுதிகள்: சென்னை துறைமுகம், வாணியம்பாடி, நாகப்பட்டினம். முன்னதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு வழங்கி பின்னர் ஒரு தொகுதியை காங்கிரஸிற்காக பறித்துக் கொண்டது. பின்னர் ஏற்பட்ட கூட்டணி அழுத்தத்தின் காரணமாக ஒரு தொகுதி மீண்டும் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment