
அ.தி.மு.க., சார்பில் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் வைகோவை சந்தித்து பேசினர். இந்த பேச்சில் 13 தொகுதிகளும் வரும் காலத்தில் ஒரு ராஜ்யசபா எம்.பி.,யும் தருவோம் என்று தெரிவித்தனர். ஆனால் வைகோ 16 சீட்டுகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டு தருமாறு கேட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து இது குறித்த விவரத்தை ஜெ,. யிடம் எடுத்து சொல்ல அ.தி.மு.க,. நிர்வாகிகள் போயஸ் கார்டன் சென்றனர். அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சு குறித்து உயர்நிலைக்கூட்டத்திலும், மாவட்ட செயலாளர்களுடனும், வைகோ கலந்து ஆலோசிக்கிறார். பின்னர் வைகோ போயஸ்கார்டனுக்கு சென்று தொகுதிகள் குறித்து சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment