Mar 19, 2011

பாரதிய ஜனதாவின் வேஷம் கலைந்தது!!

புதுதில்லி, மார்ச் 19- இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பாஜக இரட்டை நிலையை கடைபிடித்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இத்தகவலை பிடிஐ செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் சுலபமாக அரசியல் லாபம் பெறலாம் என்பதால் அதை பகிரங்கமாக எதிர்ப்பதாகவும், ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தால் எந்தவகையிலும் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு பாதிப்பு வராது என்றும் அக்கட்சி மேலிடம் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.
விக்கிலீக்ஸ் தகவல் குறித்து பாஜக விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.

No comments: