புதுடெல்லி,மார்ச்.7: ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்புகளின் பழியை சுமந்து அநியாயமாக சிறையிலடைக்கப் பட்டிருக்கும் முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச்செய்து அநீதமாக அவர்களை சிறையிலடைத்ததற்காக இழப்பீடு வழங்கவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.
சுவாமி அஸிமானந்தா மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கினைக் குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனடிப்படையில் மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கு தெளிவாகியுள்ளது. தீவிரவாதச் செயல்களில் தங்களின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதை ஆர்.எஸ்.எஸ்ஸால் மறுக்கவியலாது என சி.பி.எம். மத்திய கமிட்டி கூட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment