விக்கிலீக்ஸ் இணையம் மூலம் வெளியான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல் பரிமாற்ற குறிப்புகளில் இருந்து இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது. சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த போரில் பொதுமக்கள் பலியாவது குறித்துக் இந்திய அரசு கவலை தெரிவித்தது. ஆனாலும் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையை சிறிலங்கா அரசு தொடர்வதை இந்தியா எதிர்க்கவில்லை.
2009 ஜனவரி மாதம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை அவரது மாளிகையில் சந்தித்த அப்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மனித உரிமைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதைத் தவிர, வேறு எந்த நோக்கத்துடனும் தான் கொழும்பு வரவில்லை என்று கூறியதாக, அமெரிக்கத் தூதுவரிடம் இந்தியத் தூதரக அதிகாரி தெரிவித்தார்.
போர் தொடர்வதை இந்தியா எதிர்க்கவில்லை என்று அவர் வெளியிட்ட அறிக்கை மூலமே தெளிவாகியிருக்கிறது. அத்துடன் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்ட நிகழ்ச்சி நிரலில், சிறிலங்கா பிரச்சினையையும் சேர்த்து, அறிக்கை வெளியிட்டால்- சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா. குரல் கொடுத்தால்- அது எதிர்விளைவுகளைத் தான் ஏற்படுத்தும் என்று பிரித்தானிய சிறப்புத் தூதுவரிடம் சிவசங்கர் மேனனும், எம்.கே.நாராயணனும் கூறியுள்ளனர். என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ள்து.
1 comment:
Congress full and full waste party
Post a Comment