Mar 20, 2011

வைகோவின் அரசியல் வீழ்ச்சியும் கருணாநிதியும்!!

மார்ச் 21, மதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் எல்லாம் வெளியேறி திமுகவில் இணைந்து விட்டனர். மீதம் இருப்போரும் இப்போது வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். தேர்தலை புறக்கணிக்கும் மதிமுகவின் முடிவிற்கு அக்கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனால் புதுச்சேரி மாநில திருநள்ளார் தொகுதி எம்.எல்.ஏ. சிவா மதிமுகவில் இருந்து விலக முடிவுசெய்துள்ளார். இவரைத் தொடர்ந்து மேலும் சில மதிமுக நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலக ரகசியமாக ஆலோசனை செய்து வருவதாக தகவல் வருகின்றன.

சிந்திக்கவும்: வைகோவின் முதல் எதிரி கருனாநிதான் வைகோ திமுகவில் முன்னணி பேச்சாளராக அடுத்த கட்ட தலைவராக இருந்தார். கருணாநிதி தனது குடும்ப அரசியலுக்கு
பிற்காலத்தில் வைகோ இடைஞ்சலாக இருப்பார் என்று கருதி வரை வளரவிடாமல் தடுத்து வந்தார். அதன் காரணமாகவே வைகோ தனி அணி அமைத்தார் என்பதை இப்போது நினைவு கூற வேண்டிய தருணம் இது.

வைகோ அரசியலில் சாதாரண அரசியல் வாதிகள் போல் இருந்தாலும் தமிழர் ஆதரவாளர் என்ற முறையில் அவரது சரிவு வருத்தம் அளிப்பதாகவே உள்ளது. தொடர்ந்து ஈழ தமிழருக்காக குரல் கொடுத்த தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. கருணாநிதியின் மோசடி அரசியலை விட வைகோ எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லலாம்.

1 comment:

ELANGOVAN said...

vaiko can't even run his own political party MDMK, such a useless leader. how can he capture DMK after karunanidhi. thank god he didnt bcom a leader in DMK. he would have made DMK dummy like MDMK by now.