ஜெயலிதா இவர் பற்றி நாம் நிறைய கூற தேவையில்லை. இவர் ஆளுமை உணர்வு கொண்டவர். இதுவரை நடந்த திமுக, ஆதிமுக தொகுதி பங்கீட்டில் யார்? இதுவரை சரியாக சாணக்கியமாக காய்களை நகர்த்தினார்கள் என்றால்? அது ஜெயலிதா என்று சொல்லலாம்.
கருணாநிதியை அரசியல் சாணக்கியன் சென்று சொல்வார்கள், ஆனால் அவரையும் மிஞ்சிவிட்டார் ஜெயலிதா என்றே சொல்லவேண்டும். கருணாநிதி காங்கிரஸ் இடம் அடிபணிந்து விட்டதை நம்மால் பார்க்க முடிகிறது.
ஆனால் இந்த தொகுதி பங்கீட்டில் ஜெயலிதா மற்றவர்களை சாதுரியமாக சமாளித்தார்.
அத்தோடு மூன்றாவது அணி உருவாகாமல் சாணக்கியமாக தடுத்தார். அதே நேரம் வேட்பாளர்கள் பட்டியலை திடீர் என வெளியிட்டு கூட்டணி கட்சிகளுக்கு ஒரு நெருக்கடியை கொடுத்து பின்னர் அதை பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்தார்.
எல்லாரையும் எப்போதும் தன்னை விட்டு போகாத வண்ணம் பார்த்து ஒரு ஆளுமையின் கீழ் கொடுவந்தார் என்றே சொல்லவேண்டும். மேலும் வைகோ ஒருவருடைய பிரச்சனை மட்டுமே இருக்கிறது அதையும் கடைசி கட்டத்தில் தீர்ப்பார். வைகோ இந்த தேர்தலில் போட்டியிட வில்லை என்று சொல்வது எல்லாம் வீண் பேச்சு.
கருணாநிதியை சாணக்கியன் என்று சொல்லமுடியவில்லை. அவர் காங்கிரசால் ஆட்டுவிக்கப்படும் பொம்மையே. இவர் ஈழ தமிழர்களுக்கு செய்த துரோகம் 35 வருடகால ஒரு உயிர் போராட்டத்தை கொன்ற ஒரு செயலுக்கு தமிழக மக்கள் நிச்சயம் திமுக, காங்கிரஸ் கூட்டணியை பலி தீர்ப்பார்கள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் நமக்கு சொல்லும்.
அன்புடன்; தமிழ் செல்வன்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Very true . . DMK will lose . . .
I accept your opinion
Post a Comment