Mar 21, 2011

பாரதிய ஜனதா உட்கட்சி பூசல் ஆரம்பம்!!

மார்ச் 21; பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அத்வானி எழுதிய கடிதம், தற்போது கட்சிக்குள் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு மன்னிப்பு தெரிவித்து, அத்வானி எழுதிய கடிதம் தான் கட்சியை துண்டாடிக் கொண்டிருக்கிறது நடந்த விவகாரம் இதுதான்.

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்திய கறுப்புப் பணத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற பிரச்சனையில் பார்லிமென்டிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கறுப்புப் பணத்தைக் கொண்டு வர மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அத்வானி குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்த கறுப்புப் பணம் வெளிநாட்டில் எவ்வளவு உள்ளது என்பது குறித்து ஒரு ரிப்போர்ட்டையும் பா.ஜ., தயார் செய்ததாக கூறியது. ஆனால் இந்த ரிப்போர்ட், கட்சிக்காரர்கள் தயாரிக்கவில்லை; சில பொருளாதார நிபுணர்கள் ரெடி செய்த ரிப்போர்ட். இதை, பா.ஜ., தன் அறிக்கையாக போலியாக வெளியிட்டது.

இதில் ஒரு இடத்தில் ராஜிவும், சோனியாவும் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஷயம் தெரிந்த உடனேயே எனக்கும், ராஜிவுக்கும் உங்கள் அறிக்கையில் குறிப்பிட்டபடி வெளிநாட்டு வங்கியில் பணம் கிடையாது என்று சோனியா, அத்வானிக்கு கடிதம் எழுதினார்.

அதற்கு அத்வானி, "நடந்த தவறுக்காக மன்னிப்பு தெரிவிப்பதாக' பதில் கடிதம் எழுதினார். அதுதான் இப்போதைய பிரச்னையே. இந்த அத்வானி கடித விவகாரத்தை காங்கிரஸ் வெளியிட்டு விட்டது. அத்வானி மன்னிப்பு கேட்ட விஷயம் இப்பொது கட்சிக்குள் பூகம்பமாக வெடித்துள்ளது.

No comments: