ஸ்ரீநகர், மார்ச்.13: கஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்திற் கிடையே 114 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளான பாதுகாப்பு படையினரை தண்டிப்பதற்கு நேர்மையான, பாரபட்சமற்ற கமிஷனை மத்திய அரசு நியமிக்க வேண்டுமென சி.பி.எம் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரட் வலியுறுத்தியுள்ளார்.
நீதிக் கிடைக்காமல் சமாதானத்தை குறித்து பேச இயலாது என பிருந்தா காரட் தெரிவித்தார். கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு நியமித்த மத்தியஸ்தர் குழு ஏற்பாடுச்செய்த 3தின மகளிர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார் பிருந்தா காரட்.
குற்றவாளிகளான அதிகாரிகளை தண்டிப்பது சமரசத்திற்கு வாய்ப்பை உருவாக்கும். இது கஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியிலான தீர்வை காண்பதற்கான அடித்தளத்தை உருவாக்கும். கடந்த ஆண்டு நடந்த போராட்டம் தொடர்பான ஒரு வழக்கில் கூட நடவடிக்கை எடுக்காதது ஆச்சரியப்பட வைக்கிறது. குற்றவாளிகளுக் கெதிராக வழக்கு பதிவுச் செய்யாதது, கஷ்மீர் மக்களுக்கும், இந்தியாவின் விருப்பத்திற்கு நலன் பயக்காது. இவ்வாறு பிருந்தா காரட் கூறினார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment