
அணுசக்தி உலைகளில் வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து அணுமின் நிலையத்திலிருந்து 730 பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அணுசக்தி நிலையத்தின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அணுசக்தி நிலையத்தின் 20 கி.மீ சுற்றளவிற்கு வசித்த மக்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியில் 11 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜப்பான் சந்தித்த மிகப்பெரிய பேரிடர் இது என நேற்று முன் தினம் நாட்டு மக்களுக்கு உரைநிகழ்த்திய ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment