
தேசிய தலைவர் இ.அபூபக்கர் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், இந்தியாவில் ஒருபுறம் அரசியல் தலைவர்கள் நாட்டை கொள்ளையடிக்கும் போது மறுபுறம் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர் என குறிப்பிட்டார். எஸ்.டி.பி.ஐ தேசிய பொதுச் செயலாளர்களான எ.ஸயீத், முஹம்மது உமர்கான், ஹாஃபிஸ் மன்சூர் கான், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைவர் மெளலவி உஸ்மான் பேக் , எஸ்.டி.பி.ஐ மாநில செயற்குழு உறுப்பினர் ஆலியா ஃபர்வீன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலத் தலைவர் ஷஹாபுத்தீன் ஆகியோர் உரைநிகழ்த்தினர். மேற்கு வங்காள தலித் சேனா தலைவர் சுதீப் பிஸ்வாஸ் தனது கட்சியை கலைத்துவிட்டு எஸ்.டி.பி.ஐயில் இணைவதாக மாநாட்டில் அறிவித்தார்.
No comments:
Post a Comment