Feb 8, 2011

உலககோப்பை போட்டியில் மைக் ஹஸ்சி, ஹவுரிட்ஸ் ஆடவில்லை!!!

மெல்போர்ன், பிப். 8: உடல் தகுதி இல்லாமலேயே மைக் ஹஸ்சி 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று இருந்தார். தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உடல் தகுதியுடன் இல்லை. தற்போது அவர் உடல் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. இந்த காயம் காரணமாக மைக் ஹஸ்சி உலககோப்பை போட்டியில் விளையாடவில்லை. இதேபோல முன்னணி சுழற்பந்து வீரரான நாதன் ஹவுரிட்சும் காயம் காரணமாக உலககோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. மைக் ஹஸ்சி, ஹவுரிட்ஸ் இருவரும் காயம் காரணமாக உலககோப்பையில் விளையாடாதது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த இருவருக்கும் பதிலாக பெர்குசன், ஜேசன் கிரெஸ்ஜா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

No comments: