
வளர்ந்து வரும் அறிவியல் உலகில் ரோபோ”க்களின் பங்கு அவசியமாக திகழ்கிறது. பல துறைகளில் “ரோபோ”க்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது முதியவர்களுக்கு உதவக்கூடிய புதியவகை “ரோபோ”க்களை விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர். நியூசிலாந்தை சேர்ந்த ஒரு விளையாட்டு நிறுவனம் ஒரு புதியவகை ரோபோவை வடிவமைத்து வருகிறது. அதன்மூலம் மூளையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவதிப்படும் முதியோருக்கு உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்த “ரோபோ” கற்றுத்தரும் “குங்பூ பங்க்” எனப்படும் புதிய விளையாட்டின் மூலம் அந்த நோயை குணப்படுத்த முடியும் என்றும் நம்பப்படுகிறது. இந்த “ரோபோ”வை நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வடிவமைத்து வருகின்றனர். இந்த ரோபா”க்கள் முதியோர்களுக்கு பலவிதங்களில் உதவியாக இருக்கும். ரத்த அழுத்த சோதனை, உடலில் இருக்கும் இன்சுலின் அளவு போன்றவற்றை கணக் கெடுத்து பதிவு செய்து கொள்ளும். பின்னர் அதில் பொருத்தப் பட்டுள்ள வயர்லெஸ் இணைப்பு மூலம் டாக்டர் அல்லது நர்சுகள் அறிந்து கொள்ள முடியும். அதே நேரத்தில் முதியவர் ஒருவர் தவறி கீழே விழுந்து கிடந்தால் கூட அதுபற்றிய தகவலையும் இது தெரிவிக்கும்.
No comments:
Post a Comment