புதுடெல்லி, பிப்.8: உலக கோப்பைக்கான இந்திய அணியில் பிரவீன் குமாரும் இடம் பெற்றிருந்தார். பிரவீன் குமார் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பிரவீன்குமாருக்குப் பதிலாக ஸ்ரீசாந்த் அணியில் சேர்க்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சினிவாசன் இன்று தெரிவித்துள்ளார்.இந்தியா, தென்ஆப்பிரிக்கா இடையேயான போட்டியில் இந்திய பந்து வீச்சாளர் பிரவீன் குமாருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக தொடரில் இருந்து அவர் வெளியேறி நாடு திரும்பினார்.
காயம் சிறியதாக இருந்ததால் விரைவில் குணமடைந்துவிடும் என்று அவரை இந்திய அணியில் தேர்வாளர்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி காயம் குணமடையாததால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் சச்சினுக்கு சிகிச்சையளித்த டாக்டர். ஆன்ட்ரூ வாலேஸ் பிரவீன் குமாருக்கு சிகிச்சை அளிக்க உள்ளார். இதற்காக பிரவீன்குமார் லண்டன் செல்லவுள்ளார். பிரவீன்குமாருக்குப் பதிலாக இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் சேர்க்கப்பட்டுளார். ஸ்ரீசாந்த் முதல் முறையாக உலககோப்பையை சந்திக்கிறார். ஸ்ரீசாந்த் இதுவரையில் 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வேகப்பந்து வீச்சில் பந்தை ஸ்விங் செய்வதில் ஸ்ரீசாந்த் வல்லவர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment