Feb 8, 2011

இந்தியா டுடே பத்திரிக்கையின் ஹிந்துத்துவா சிந்தனை!!!

புதுடெல்லி, பிப்.8: அஜ்மீர் தர்கா, மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்குகளில் முக்கிய குற்றவாளியான சுவாமி அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை இந்தியாடுடே எடிட்டர் வெளியிட மறுத்ததால் அப்பத்திரிகையிலிருந்து வெளியேறினார் ஆசிஷ் கேதான். டெஹல்கா சார்பாக குஜராத் இனப்படுகொலை குற்றவாளிகளை ரகசிய கேமரா ஆபரேசன் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியவர்தான் பத்திரிகையாளர் ஆசிஷ் கேதான். இவர் கடந்த ஒன்றரை வருடமாக இந்தியா டுடேவின் கீழ் இயங்கும் ஹெட்லைன் டுடேவில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். இத்துடன் இந்தியா டுடேவுக்காகவும் செய்தி அறிக்கைகளை தயார் செய்துவந்தார்.

இந்நிலையில், அஸிமானந்தா டெல்லி பஞ்ச்குலா நீதிமன்றத்தில் சுயமாக அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அறிக்கையாக தயார் செய்து இந்தியா டுடேவிடம் அளித்துள்ளார். ஆனால், அதனை வெளியிட இந்தியா டுடேவின் எடிட்டோரியல் டைரக்டர் மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தியா டுடேவிலிருந்து வெளியேறி டெஹல்கா பத்திரிகையில் மீண்டும் இணைந்தார் கேதான். பின்னர் டெஹல்கா அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஆசிஷ் கேதான் தற்போது டெஹல்காவின் இன்வெஸ்டிகேஷன் பிரிவு எடிட்டராக பணியாற்றி வருகிறார்.

No comments: