Feb 9, 2011

கிட்னி திருடர்கள் ஜாக்கிரதை!!!

கடப்பா: தமிழக இளைஞர்களை வேலை வாங்கித் தருவதாக ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று ஒரு கும்பல் கிட்னி திருடியுள்ளது. நெல்லை: மாவட்டம் தென்காசி மற்றும் புளியங்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் சுடலைமாடன் (18), அழகர் ராஜா, காளிராஜன். வேலை தேடிக் கொண்டிருந்த அவர்களிடம் ஒரு கும்பல் ஆந்திராவில் ரூ. 4 ஆயிரம் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்றது. கூறியவாறே ஒரு தொழிற்சாலையில் வேலையும் வாங்கிக் கொடுத்துள்ளனர். ஒரு நாள் அங்கு வந்த அந்த கும்பல் 3 தமிழக இளைஞர்கள் முகத்திலும் மயக்க மருந்து தெளித்தது.

மயங்கியவர்கள் கண் விழித்தபோது மருத்துவமனையில் இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். அவர் உடல்களில் வலப்பக்கத்தில் கட்டுபோட்டு இருந்தது. அவர்களுக்கு கிட்னி ஆபரேஷன் நடந்துள்ளதாகவும், அவர்கள் கிட்னிகள் மற்றவர்களுக்கு பயண்படுத்தப் பட்டுள்ளதாகவும் மருத்துவர் தெரிவித்தார். இதைக் கேட்ட மூவரும் திகைத்தனர். இதில் சுடலைமாடன் மட்டும் அங்கிருந்து தப்பி சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். உடனே தமிழக போலீசில் இது குறித்து புகார் கொடுத்தார். ஆந்திராவில் சிக்கியுள்ள அழகர் ராஜா, காளிராஜன் ஆகியோரை மீட்க போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

No comments: