புதுடில்லி : சீன ராணுவம் நவீனமாகி வருவது கவலையளிப்பதாக உள்ளது என, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார். இந்திய எல்லைகளை யொட்டி சீனா ஏவுகணைகளை நிறுத்தியிருப்பதால், நாமும் நமது பங்குக்கு ராணுவத்தை அதிநவீனமயமாக்கி வருகிறோம்.சீன எல்லையையொட்டி சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள ராணுவ முகாம்களுக்காக எஸ்.யு.,30 எம்.கே.ஐ., போன்ற விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன. சீனாவின் வேகத்துக்கு நாம் நம்முடைய ராணுவத்தை நவீனமயமாக்க வேண்டிய அவசியம் இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப நாம் நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். ராணுவ பாதுகாப்பில் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும். சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே எல்லைப்புற பிரச்னை இருப்பதால், எல்லை பாதுகாப்பு படையையும் நவீனப்படுத்தி வருகிறோம்.
சிந்தனை: அந்தோணியாரே உங்களுக்குத்தான் உங்கள் நண்பன் சிறிலங்கா ராசபக்சே இருக்கானே அவனிடம் உதவி கேட்கவேண்டியது தானே! உங்கள் ஏவுகணை எல்லாம் நிறுத்த அவன் இடம் தருவான். உங்கள் ராணுவ கேந்திரங்களை அமைக்க இடம் தருவான் கேட்டு பாருங்களேன்!! நல்லா அடிச்சான் ஆப்பு உங்களுக்கு. சீனாவுக்கு எல்லா விதமான உதவிகளையும் செய்து வருகிறார் உங்கள் அருமை நண்பர் ராசபக்சே. சீனா வார்த்தக துறைமுகம் என்ற பெயரில் ராணுவ துறைமுகத்தை கட்டி முடித்திருகிறது. தமிழீழம் அமைந்திருந்தால் உங்கள் கனவு பலித்திருக்கும். அதுதான் அன்னை இந்திரா காந்தி தமிழீழம் அமைய தமிழர்களுக்கு உதவியும், பயிற்ச்சியும் அளித்தார்கள். எம்.ஜி.ஆர். பொருளுதவியும் இன்னபிற உதவிகளும் செய்தார். உங்களுக்கு எங்க புரிய போகிறது. நீங்கள் இலங்கை மண்ணில் அமைதிப்படை என்றும், பேரினவாத ஆதரவு என்றும் தமிழீழ போராட்டத்தை மைதானமாக்கி விளையாடினீர்கள், ஆப்கானிஸ்தானும் உங்களுக்கு விளயாட்டு மைதானம் தான் அங்குள்ள ஆயுத குழுக்களுக்கு ஆயுதம் கொடுத்து உதவுகிறீர்கள். உங்களை போன்ற வல்லரசுகள் எல்லாம் அரசியல் சதுரங்க விளையாட்டில் இப்படி லேட்ச்ச கணக்கில் மக்களை கொன்று குவித்து நீங்கள் விரும்பியது போல விளையாடுகிறீர்கள். உங்களுக்கும் ஒரு காலம் இருக்கு மறந்து விடவேண்டாம். இதே மாதிரி உங்களையும் மைதானமாக்கி எல்லா நாட்டு காரனும் விளையாடுவான். நீங்கள் அடுத்தவர்களுக்கு என்ன செய்தீர்களோ அது வுங்களுக்கு அப்படியே திரும்பி வரும் இதுதான் நியதி. சீக்கிரம் சீனத்துகாரர்கள் உங்களை துண்டாடுவார்கள் பொறுத்திருங்கள் மக்களே!!
நன்றி: தமிழ் செல்வி மினஞ்சல் வழியாக.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
விரைவில் இந்தியர்கள் உணர்வார்கள் தமிழீழமா சிரிலங்காவா தமக்கு சார்பானதென்பதனை. வெகு வெகு விரைவில். அதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் இலங்கையில் நடைபெற்று வருகின்றது. காலகாலமாக ஈழத்தமிழர் கெஞ்சினோம் சிங்களவனுக்கு அடிவருடாதே என்று. கேட்கவில்லை. மிக விரைவில் அதன் பலனை அனுபவிக்கப்போகின்றார்கள்.
Post a Comment