Feb 16, 2011

சும்மா வரலாற்றில் இருந்து ஒரு பிட்டு!!

அலெக்சாண்டர் இந்தியாவை நோக்கிப் படை எடுத்து வந்தான். அவன் அக்கரையில் நின்று கொண்டு தனது உளவாளிகளை விட்டு இந்தியா மீது படை எடுக்கலாமா? நிலைமை எப்படி யிருக்கிறது என்று பார்த்து வரச் சொன்னான். அலெக்சாண்டரின் படையைச் சார்ந்த ஒற்றர்கள் இந்தியர்களைப் பார்த்துவிட்டு வந்து அலெக்சாண்டரிடம் சொன்னார்களாம். இந்தியர்கள் தனித்தனியாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னான்.உ டனே அலெக்சாண்டர் படை எடுக்கலாம் என்று சொல்லிவிட்டுச் சொன்னான்
சாப்பிடுவதிலேயே ஒற்றுமை இல்லை. சாப்பிடும் பொழுதே இவர்கள் ஒருவருக்கு ஒருவர் தனியாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். ஒருவர் சாப்பிடுவதை இன்னொருவர் பார்த்துவிடக் கூடாது என்று நினைத்து சாப்பிடுகிறார்கள். இவர்கள் எங்கே ஒற்றுமையாக இருக்கப் போகிறார்கள்? எனவே இவர்கள் மீது உடனே படை எடுக்கலாம் என்று தனது தளபதிகளுக்கு உத்தரவிட்டானாம் இது ஒரு வரலாற்றுச் செய்தி.