Feb 16, 2011

ரஜினி அரசியலுக்கு வருவாரா?

டெல்லி: ரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவது நிச்சயம் என்றார் மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சிறந்த பொழுது போக்காளர் என்ற விருது என்டிடிவி சார்பில் நேற்று ரஜினிக்கு வழங்கப்பட்டது. அதில் சிதம்பரம், "1996ல் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று உறுதியாக எதிர்ப்பார்த்தேன் நான். அது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. எனக்கும் உங்களுக்கும் ஏன் அவருக்கும்கூட அது நன்றாகத் தெரியும். அவர் அப்போது வந்திருக்க வேண்டும் என்றார். ஆனால் இப்போது வந்தாலும் அவர் மகத்தான வெற்றியைப் பெறுவார் என்றார் சிதம்பரம். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அரசியலுக்கு வரும் திட்டம் உண்டா என்று பின்னர் பிரணாய் ராய் நேரடியாக ரஜினியைக் கேட்டபோது, கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார் ரஜினி வழக்கம்போல.

சிந்திக்கவும்: ரஜினியை எப்படியாவது காங்கிரஸில் இழுத்து போடலாம் என்று நூல் விடுகிறார் நம்ம சிதம்பரம். காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் செத்துபோய் கிடக்கிறது. அதை எப்படியாவது உயிர் கொடுத்து எழுப்பலாம் என்று பார்கிறார்கள். அது இனி தமிழ் நாட்டில் நடக்காத காரியம் நீங்கள் ரஜினியை இல்லை? வேறு யாரை கொண்டு வந்தாலும் நடக்காது. லேட்ச்ச கணகில் தமிழ் மக்களை கொன்று குவிக்க காரணமாக இருந்து விட்டு தமிழ் நாட்டில் கட்சி நடத்தி ஒட்டு பொறுக்கலாம் என்று நினைத்தால் நடக்காது. இதை தமிழர்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்.

No comments: