Feb 11, 2011

கர்நாடகாவில் காவல்துறை கயவர்களுக்கு எதிராக தீர்ப்பு!!

பெங்களூர்,பிப்.11:கடந்த 2009 ஜூலை மாதம் மைசூரில் நடந்த அசம்பாவித சம்பவத்திற்க்காக சட்டத்திற்க்கு புறம்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களை கைது செய்தமைக்காக கர்நாடாக உயர் நீதிமன்றம் ரூபாய் ஐம்பதாயிரத்தை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. இப்படி சட்டத்திற்கு புறம்பாக காவல்துறை அதிகாரிகள் நடந்து கொள்வதை ஒரு போதும் நீதிமன்றம் அனுமதிக்காது ஆகையால் இந்த செயலில் ஈடுபட்ட காவல்துறையினரிடமிருந்தே இந்த தொகை வசூலிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

மைசூரில் ஏற்ப்பட்ட சிறு பிரச்சனையை பெரிதாக்கி அதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் ஈடுபட்ட சங்கபரிவார கும்பல்களின் அட்டூழியத்தை கண்டித்தும், ஆளும் பா.ஜ.க அரசாங்கத்தின் அராஜக போக்கை கண்டித்தும் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த இருந்தனர். ஆனால் காவல்துறையினரோ கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டு குழுமியிருந்த நூற்றுக்கணக்கான பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்களை கைது செய்தனர். இதை எதிர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த முஹம்மது வசீம் மற்றும் 164 நபர்கள் கர்நாடகா அரசாங்கத்தின் அராஜபோக்கை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். அதில் அவர்களுக்கு ரூபாய் 10 லட்சத்தை அரசாங்கம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

No comments: