Feb 19, 2011

பூமியை தவிர மற்ற கிரகங்கள் அமைதியாக இருக்கே ஏன்?

பிப்:19, அமெரிக்காவின் நாசா!! விண்வெளி ஆராட்ச்சியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது . பூமியை தவிர்த்து மற்றைய கிரகங்களில் மனிதர்கள் வாழ சாத்தியம் இருக்கிறதா என்று தொடர் ஆராட்ச்சியில் நாசா ஈடுபட்டு வருகிறது. ஏன் மற்ற கிரகங்கள் நிம்மதியா இருக்குன்னு பார்த்தாங்களோ என்னவோ? நம்ம மனிதர்கள் கால் வைத்தால் அதுவும் உருப்பட்ட மாதிரிதான். இதன் ஒரு பகுதியாக டிஸ்கவரி விண்கலம் வருகிற வியாழன் அன்று விண்ணிற்கு செல்ல தயாராக உள்ளது என நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த டிஸ்கவரி விண்கலத்தில் 6 உறுப்பினர்கள் கொண்ட குழு பயணிக்கிறது. இக்குழு 11 நாள் பயணம் மேற்கொண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான உதிரி பொருட்களை கொண்டு செல்கிறது. இந்த பெப்ரவரி மாதம் 24 ம் திகதியன்று விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளது. டிஸ்கவரி விண்கலம் 39 வது முறையாக விண்ணில் பயணிக்க உள்ளது. ப்ளோரிடாவிட் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வியாழன் அன்று புறப்படுகிறது.

No comments: