மிர்பூர், பிப்.19- இந்தியா- வங்காளதேசம் மோதும் முதல் போட்டி இன்று மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் பீல்டிங் தேர்வு செய்தது. இந்தியா 8.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்னை தொட்டது. சச்சின் 28 ரன்னில் ரன் அவுட்ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 69 ரன்னாக இருந்தது. அடுத்து சேவாக்குடன் கம்பீர் ஜோடி சேர்ந்தார். சேவாக் சிறப்பாக விளையாடி 45பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா 14.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. கம்பீர் 33 ரன் எடுத்திருக்கும்போது அவுட் ஆனார். அப்போது இந்தியா 23.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன் எடுத்திருந்தது.
அடுத்து 3-வது விக்கெட் ஜோடியாக சேவாக்குடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் வங்காளதேச பந்துவீச்சை விளாசிதள்ளினர். சேவாக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 94பந்தில் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் சதம் அடித்தார். அப்போது இந்தியா 31.2 ஓவரில் 200 ரன்னை தொட்டது. சிறப்பாக விளையாடி வந்த சேவாக் 175 ரன் குவித்து அவுட் ஆனார். அடுத்து யூசுப் பதான் களம் இறங்கினார். வீராட் கோலியும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். கடைசி பந்தில் யூசுப்பதான் அவுட் ஆனார். இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 370 ரன் குவித்தது. வீராட் கோலி 100 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
பின்னர் 371 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்காளதேசம் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம், கெய்ஸ் களம் இறங்கினார்கள். இந்த ஜோடி 4.5 ஓவரில் 50 ரன்னை தொட்டது. அணியின் ஸ்கோர் 6.5 ஓவரில் 56 ரன்னாக இருக்கும்போது 34 ரன் எடுத்த கெய்ஸ் அவுட் ஆனார். 3 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை 32.1ஒவரில் எடுத்தது. பின்னர் வந்த வீரர்கள் வரிசையாக அவுட் ஆனதால் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா அணி 87 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து - கென்யா மோதல் :- கென்ய கேப்டன்: எதிரணியினருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் எங்கள் ஆட்டம் இருக்கும் என்று கென்ய அணியின் கேப்டன் ஜிம்மி கமான்டே, பயிற்சியாளர் எல்டின் பாப்டிஸ்டி ஆகியோர் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் கூறியது: இந்த உலகக் கோப்பை போட்டியில் கென்ய அணியின் ஆட்டம் எதிரணியினருக்கு நெருக்கடியும், அதிர்ச்சியும் அளிக்கும் வகையில் இருக்கும். பங்கேற்கும் 14அணிகளில் எதையும் குறைத்து மதிப்பிட முடியாது. எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாடுவோம். உலகக் கோப்பை போட்டிகளுக்காகவே கடந்த பல மாதங்களாக தயாராகி வந்துள்ளோம். இந்தியாவுக்கு ஜனவரி மாதமே வந்து பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளோம். இந்த உலகக் கோப்பை எங்கள் அணியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

No comments:
Post a Comment