Feb 10, 2011
விடுதலை புலிகளுக்கு ஆதரவான வைகோவின் மனுவை உயர்நீதிமன்றம் ஏற்றது!!
விடுதலைப் புலிகள் மீது மத்திய அரசு விதித்த தடையை உறுதி செய்த தீர்ப்பு ஆயத்தின் ஆணையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வுக்கு முன்னால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ரிட் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவை ஏற்பதா? என்பது குறித்து, உயர்நீதிமன்றத்தில் 10.2.2011 விசாரணை நடைபெற்றது. விசாரணையில் வைகோ எடுத்து வைத்த வாதம் பின்வருமாறு: விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்து உள்ள இந்திய அரசின் ஆணையில், விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள், அனுதாபிகளைக் காரணம் காட்டி, தடை செய்யப்பட்டு உள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகளையும், என்னுடைய மேடைப் பேச்சுக்களையும், இந்தத் தடைக்கான காரணங்களுள் ஒன்றாகக் கூறப்பட்டு உள்ளது. எனவே, இந்த வழக்கைத் தொடுப்பதற்கு எனக்கு, சட்டப்படித் தகுதி உண்டு என்று கூறினார். இவரது மனுவை சென்னை உயர்நீதி மன்றம் ஏற்று கொண்டுள்ளது. வழக்கு ரிட் மனுமீது வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment