Feb 12, 2011

68 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றமா? இருதய மாற்றமா?

சென்னை, பிப். 12: தமிழகத்தில் ஒரே நாளில் உயர் போலீஸ் அதிகாரிகள் 68 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 34 பேருக்கு பதவி உயர்வோடு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுகிற மற்றும் சொந்த ஊரில் பணியாற்றுகிற ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து ஒரே நாளில் 68 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சிந்திக்கவும்: இந்தியாவின் போலீஸ் துறை பொதுமக்களின் வரிபணத்தில் சம்பளம் வாங்கி கொண்டு பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்காமல் கொள்ளைகாரர்களிடமும், கிர்மினல் குற்றவாளிகளிடமும், ரவுடிகளிடமும், சாக்கடை அரசியல்வாதிகளிடமும் லஞ்ச பணத்தை வாங்கி கொளுத்து போகிவுள்ள ஒரு துறை. இவர்களுக்கு நீதி என்றால் என்ன? நேர்மை என்றால் என்ன? எந்த கடையில் விற்கிறது என்று கேட்பார்கள். இவர்களில் ஒரு சதவீதம் நல்லவர்கள் இருப்பார்கள் என்றால் அதுவே பெரிய விஷயம். இவர்களை இடம் மாற்றுவதினால் எந்த பிரோஜனமும் இல்லை. இவர்களது இருதயங்களை மாற்றினால் அப்போது இவர்கள் பிரோஜன படுவார்கள். இல்லாமல்!! இவர்களை இடம் மாற்றினால் என்ன? மாற்றாவிட்டால் என்ன? ஒரு பிரோஜனமும் இல்லை.

No comments: