தோகா: ஆசிய கோப்பை கால்பந்து தொடரில், இன்று நடக்கும் பைனலில் ஜப்பான், ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கத்தார் தலைநகர் தோகாவில் நடக்கும் 15வது ஆசிய கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தொடரின் சாம்பியனை நிர்ணயிக்கும் பைனல் இன்று நடக்கிறது. இதில் ஜப்பான், ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
ஜப்பான் ஆதிக்கம்: ஆசிய கோப்பை கால்பந்து அரங்கில், ஜப்பான் அணி மூன்று முறை (1992, 2000, 2004) பைனலுக்கு முன்னேறியது. இதில் அனைத்திலும் வெற்றி பெற்று கோப்பை வென்று சாதித்தது. கடந்த 2007ல் நடந்த இத்தொடரில் அரையிறுதி வரை முன்னேறிய ஜப்பான் அணி, சவுதி அரேபியா அணியிடம் தோல்வி அடைந்தது. பின்னர் நடந்த 3-4வது இடத்துக்கான போட்டியில் தென் கொரியாவிடம் வீழ்ந்த ஜப்பான் அணி 4வது இடம் பிடித்து ஆறுதல் அடைந்தது.
நான்காவது முறை: ஆசிய கோப்பை கால்பந்து அரங்கில், அதிக முறை கோப்பை வென்ற அணிகள் வரிசையில் சவுதி அரேபியா, ஈரான், ஜப்பான் அணிகள் உள்ளன. இம்மூன்று அணிகளும் தலா 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இன்றைய பைனலில் ஜப்பான் அணி வெற்றி பெறும் பட்சத்தில், இத்தொடரில் அதிக முறை (4) கோப்பை வென்ற அணிகள் வரிசையில் முதலிடம் பிடிக்கலாம்.
பதிலடி வாய்ப்பு:ஆசிய கோப்பை கால்பந்து அரங்கில், ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக பைனலுக்கு முன்னேறி உள்ளது. கடந்த 2007ல் நடந்த இத்தொடரின் காலிறுதியில், ஜப்பான் அணியிடம் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, இன்றைய பைனல் மூலம் பதிலடி கொடுக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை ஆஸ்திரேலிய வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இந்தியா......ஹி ஹி ஹி ஹி...............
Post a Comment