ஜித்தா,ஜன.29:கடந்த புதன்கிழமை ஜித்தாவில் பெரு மழையினால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் மக்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளுக்கிடையே கடுமையான மழை கடந்த புதன்கிழமை ஜித்தாவில் பெய்தது. இதனால் ஏற்பட்ட விபத்துக்களில் 4 பேர் மரணித்தனர். முக்கிய சாலைகளெல்லாம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி நதிபோல் காட்சியளித்தன. இதனால் மக்கள் வீடுகளிலும், பள்ளிக்கூடங்கள், கடைகளில் ஒதுங்கினர். வியாழக்கிழமை கால நிலை மாறினாலும் மக்களின் வாழ்க்கை சாதாரணகதிக்கு மாற இன்னும் சில தினங்கள் ஆகலாம். மூன்று மணிநேரத்தில் 111 மில்லி லிட்டர் மழை பெய்துள்ளது. மழைத் துவங்கி சில மணி நேரங்களுக் குள்ளாகவே ஃபலஸ்தீன் தெரு, ஹாயில், மதீனா சாலை, வாலி அல் அஹத் தெரு, ஷரஃபியா ஆகிய பகுதிகள் உட்பட நகரத்தின் முக்கிய பகுதிகளெல்லாம் வெள்ளத்தில் சிக்கியது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment