Jan 28, 2011

தி கிங்ஸ் ஸ்பீச் திரை விமர்சனம்.


சமீபத்தில் வெளிவந்திருக்கும் “தி கிங்ஸ் ஸ்பீச்” எனும் மரண மொக்கையை நீங்கள் பார்க்காமல் இருப்பது சாலச் சிறந்தது. இந்தப்படம் தற்போதைய ஆஸ்கர் விருதுக்கான போட்டியின் 12 பிரிவுகளில் பரிந்துரைக்கப்படும் சிறப்பினை பெற்றிருக்கிறதுதி. இது இங்கிலாந்து தயாரிப்பு என்றாலும் ஹாலிவுட் படங்களுக்குள்ள நேர்த்திக்கு குறைவில்லை. வரலாற்று படமென்பதால் அதற்கே உரிய காலத்தை கொண்டு வரும் காட்சிகள், ராயல் குடும்பத்தினருக்கான உயர்ந்த உடைகள், உயர்ந்த வகை ஸ்காட்சுகள், தேர்ந்த நடிப்பு, இயக்கம் எல்லா எழவும் இருக்கின்றன. இவைகளே இப்போது ஆஸ்கர் விருது போட்டிகளுக்கும் சென்றிருக்கின்றன. டாம் ஹூப்பர் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்ப்படத்தின் திரைக்கதையினை கலிபோர்னியாவில் வசிக்கும் 73 வயது டேவிட் சீடர் எழுதியிருக்கிறார்.

ஆறாம் ஜார்ஜ் மன்னன் தனது திக்கு வாய் பேச்சு சிரமத்தை மாற்றி அமைத்தான் என்பதெல்லாம் மாபெரும் வரலாறாக காட்சியளிக்கிறது என்றால் முதலாளித்துவ உலகம் உருவாக்கியிருக்கும் வரலாற்று நூல்களின் தரத்தை நாம் அறியலாம். இத்தகைய வரலாறுகளைத்தான் நமது ஆர்.எஸ்.எஸ் அம்பிகளும் படித்துவிட்டு போதை ஏறி உளறி வருகிறார்கள். இங்கிலாந்து அறிவாளிகள் ஆறாம் ஜார்ஜின் வாய்ப்பேச்சு குறித்த விசயத்தை வரலாறாக ஆக்கும் போது அம்பிகள் ராமனையும், ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் எப்படியெல்லாம் ஆக்கியிருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.மூன்றாம் உலகநாடுகளின் மக்களை இந்த படம் ஈர்க்காது. ஆனாலும் ஜெயமோகன், சாரு நிவேதிதா போன்ற பார்பன அறிவாளி அம்பிகள் இந்த படத்தை சிலாகித்து எழுதுவார்கள். மற்றபடி இந்த படத்தில் ஒன்றும் இல்லை. இது ஒரு இங்கிலாந்து மன்னர் குடும்பத்து புகழ் பாடும் ஒரு படம் என்பது மட்டுமல்ல ஒரு வரலாற்று திரிபும் கூட.